பக்கம்:பாடகி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதியின் சீமையில் சுமார் எழுபது பாளையப்பட்டு கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாளையப்பட்டிலும் பெண்கள் இல்லாமலில்லை. உறங்காப்புலி விரும்பி இருந்தால் அவர் களுள் ஒரு பெண்ணே மணந்து கொண்டிருக்கலாம். எனக்குச் சேர வேண்டியவளைக் குறி வைத்துத் தாக்குவது என்றால் என்னுடைய கா ண் டீ பம் மட்டுமென்ன ஒடிந்ததா? ஒரு பெண்ணுக்காக ஆசைப்பட்ட உறங்காப்புலி, கெளரவமிக்க கமுதிக் கோட் ைடயி ன் சொல்வாக்கையே இழக்கப்போ கிருன் உறங்காப்புலி ஒரு மலடன். மங்களேஸ்வரி பெற்ற தாகக் கூறப்படும் குழந்தை உறங்காப்புலிக்குப் பிறந்ததல்ல’’ என்ற தீர்ப்பு சேதுபதியின் வாயிலிருந்து உதிருமானல் மற வர் நா ட் டு மயானத்தில் கூட உறங்காப்புலிக்கு இடம் கிடைக்காது.

நானும் சாதாரணமானவன் அல்ல: பாளையப்பட்டுக் குரிய குடும்பத்தில் பிறந்தவன் தான். உறங்காப்புலிக்கு வாரிசு இல்லையென்றால் நான்தான் கமுதிக்கோட்டைக்கு அதிபதியாக வரவேண்டியவன்; வ ம் சா வழிப்படி சேதுபதி என்னைத் தவிர வேறு எவரையும் நியமிக்க முடியாது. அத ளுல் தான் உறங்காப்புலி நான் அதிபதியாகிவிடக் கூடாது என்பதற்காகத் தன் கெளரவத்திற்கே ஊனம் விளைவித்துக் கொண்டான். மங்களேஸ்வரி இ ன் று மதிகெட்டு, நிலைதடு மாறி கண்ணிரும் கம்பலையுமாய் நிற்பதற்கு வே று என்ன காரணம்? வெட்கக்கேடு மனைவி சோரம்போனல் கூட பரவா யில்லை, கருத்த உடையார் மட்டும் கமுதிக்கோட்டைக்கு அதி பதியாக வரக்கூடாது என்பது தானே உறங்காப் புலியின் கொள்கையாக இருந்திருக்கிறது. த ர் ம ம் இன்று தன் னுடைய தராசுவைச் சேதுபதியிடம் தந்திருக்கிறது. போர்க் காலங்களில் புலிபேர்ல் சீறிப்பாயும் உறங்காப்புலி,கோட்டை கொத்தளங்களைக் காப்பதில் வல்லவன் என்ற பெயர் பெற்ற உறங்காப்புலி என்னுடைய குற்றச் சாட்டிற்கு என்ன பதில் சொல்லப் போகிருன்? -

மங்களேஸ்வரிக்குப் பிறந்திருக்கும் ஆ ண் குழந்தை உறங்காப்புலி சேர்வைக்குப் பிறந்ததல்ல; அவன் மலடன்

125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/126&oldid=698917" இலிருந்து மீள்விக்கப்பட்டது