பக்கம்:பாடகி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்ல என்றால் முதல் மூன்று மனைவிகளுக்குள் யாருக்காவது ஒருத்திக்குக் குழந்தை பிறந்திருக்க வேண்டும். இப்போது பிறந்திருக்கும் குழந்தை, மதுரையிலிருந்து மாறுவேடத்தில் கமுதிக்கோட்டைக்குள் வந்து ேப ா கு ம் இளைஞனுக்குப் பிறந்தது'-என்பது தான் என்னுடைய அழுத்தமான குற் றச்சாட்டு. எனக்குக் கோட்டைக்கு அதிபதியாக வேண்டும் என்ற ஆசை இப்போது இல்லை. அது எப்போதோ மடிந்து விட்டது. ஆனல், கமுதிக் கோட்டைக்கு அதிபதியாக வர விருக்கும் ஒருவன்கற்புள்ள பெண்ணின் வயிற்றில் பிறந்த வகை இருக்க வேண்டும். ஏனென்றால் பாளையப்பட்டு என் பது ஒரு சாதாரண ப ண க் கா ர வீட்டுக்குடும்பத்தைப் போன்றதா? அதற்கு ஒரு பின்னணி உண்டு. எல்லாம் வல்ல எங்கள் சேதுபதி இதிலும் நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். பா வ ம், உறங்காப்புலி திடீரென்று இறந்துவிட்டார்; மங்களேஸ்வரிக்குப் பிள்ளை பிறக்கிறது. அதே மாதத்தில் மங்களேஸ்வரியின் மணுளன் இறக்கிருன்.

உறங்காப்புலி சேர்வை

நான் ஆபிரம் களங்களைக் கண்டவன். சேதுபதியிடம் தங்கப் பதக்கங்கள் பெற்றவன். எத்தனையோ களங்களில் யானை மிரண்டு பி எளி றிய போ து கூட நான் அம்பாரியில் நின்று கலங்கியதில்லை. என்மீது பாய்ந்த வேலைப்பிடுங்கி எதிரி மீது வீசியிருக்கிறேன். எ ன் னே நோக்கிவரும் அம் பைத் தடுத்து ஒடிததிருக்கிறேன்-ஆ ைல் இன்று மனங்குன்றிக் கண்கலங்கி நிற்கிறேன். என் நெஞ்சம் பதறுகிறது. திருடன் பதுங்கலாம், குற்றவாளி கூனிப்போகலாம். ஆனல் நிரபரா தியான நான் ஏன் இப்படி நிலைகுலைந்து நிற்கிறேன்? மானமே பெரிது என்று ம தி க் கும் மறவர் தேசம் மனதிற்குள்ளே என்னைத் துாற்றிக் கொண்டிருக்கிறது. நான் ஊர் ஊருக்குப் போய் உண்மையைச் .ெ சா ல் ல வழியில்லை. மங்களேஸ்வரி ஒரு உத்தமி; மாசற்ற மணி விளக்கு. தங்கத்தாம்பாளத்தை

I26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/127&oldid=698918" இலிருந்து மீள்விக்கப்பட்டது