பக்கம்:பாடகி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் வீசியதைப்போல அவள்மீது அவதூறை வீசுகிறார் களே என்பதை நினைக்கும்போது தான் எ ன க் கு நெஞ்சம் பதைக்கிறது.என்னை மலடன் என்கிருன் கருத்த உடையான். எனக்கு குழந்தையே பிறக்காது எ ன் று கேலி பேசுகிருன். அதற்கு அவன் கற்பிக்கும் நியாயம் எனக்குக் குழந்தை பிறப் பதாக இருந்தால் மு. த ல் மனைவிக்கே பிறந்திருக்க வேண்டு மாம். சந்தர்ப்பம் அவனுக்கு இ ப் படி த் துணை நிற்கிறது. என்னுடைய மு த ல் மூன்று மனைவிகளுக்குப் புத்திரர்கள் இல்லை என்பது உண்மைதான். அதற்காகவேதான் நான் மங்களேஸ்வரியை நாலாவது மனைவியாக ஆக்கிக் கொண் டேன் என்பதும் பொய்யல்ல. அதுதான் கருத்துடையானுக் குக் கோபம். எத்தனையோ பாளையப்பட்டுக்கள் இருந்தும், அங்கெல்லாம் பெண் .ெ ண டு க் காம ல், மங்களேஸ்வரியை எப்படி மனைவியாக்கிக் கொள்ளலாம் என்று அவன் குமுறு கிருன். மனித ம ன ம் தோல்வியடையும் போதும் கோபம் அடையும்போதும் சூடாகிறது. மகிழ்ச்சியடையும் போதும், வெற்றியடையும் போ து ம் குளிர்ச்சியடைகிறது. அதில் கருத்துடையான் ம ட் டு ம் தெய்வப்பிறவியாக இருக்க முடியுமா? .

பல பாளை யப்பட்டுச்களில் மங்களேஸ்வரியைவிட அழ கான பெண்கள் இருந்தும் நான் ஏ ன் மங்களேஸ்வரியைத் தேர்ந்தெடுத்தேன்? அதற்குக் காரணம் அவள் அழகல்ல. இவள் குணமல்ல. அவளுடைய குலப்பெருமையுமல்ல, என் நெஞ்சில் ஆழமாக ஊறி, சுனைபோல் .ே த ங் கி நின்ற நன்றி யுணர்ச்சிதான் அதற்குக் கார ண ம். சேதுபதி போருக்கு அழைத்தபோதெல்லாம் போர்க்களம் நோக்கிப்படையோடு சென்ற பாளையப்பட்டுகளில் நானே முதற்பரிசைப் பெறுவது வழக்கம். ஒரு முறைகூட, சேதுபதியின் அழைப்பை நான் உதாசீனப்படுத்தியதில்லை. உயிரே போனலும் என் உதிரத் தில் ஊறிப்போயிருந்த உக்கிரம் என்னைக் களத்தில் மிருகமா கவே ஆக்கிவைத்துவிடும். அந்தப் பெருமைக்கெல்லாம் மூல காரணம் ஆப்ப நாட் டி ன் அஞ்சா நெஞ்சம் என்ற பேர்

127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/128&oldid=698919" இலிருந்து மீள்விக்கப்பட்டது