பக்கம்:பாடகி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ற ராமையாத்தே வர்தான், அவன்தான் மங்களேஸ்வரி யின் தகட்பன்.

“ராமையா படையை அனுப்பு’ என்றால் ‘பத்தாயிரம் வேண்டுமா? அதற்கு மேலும் வேண்டுமா’’ என்றுகேட்டவன், இப்படிஎன் பெருமைக்கெல்லாம் காரணமாயிருந்தவன் வீட் டில்,என்நெஞ்சில் மின்னும், பதக்கங்களுக்கெல்லாம் காரணமா யிருந்தவன் குடும்பத்தில் பெண்ணெடுக்க நான்விரும்பினேன். அந்தப் பெண் வயிற்றிலாவது ஒருவம்சவிளக்குத் தோன்றாதா என்ற ஏக்கம் எ ன க் கு. திருமணமான தொடக்கத்தில் இது கூடத் தோல்வியாகிவிடுமோ என்றுதான் நான் பயந் தேன். வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தால், குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டிய மூன்று பெண்களைக் கெடுத்த நான், அரச போகத்திற்காகவும். அதி பதி பதவிக்காகவும் நாலாவதாகவும் ஒரு பெண்ணைக் கெடுத் துவிட்டோமோ என்ற அச்சம் எனக்கு தோன்றியதுண்டு. சேதுபதியின் கிருபையால் அந்த அச்சம் எனக்கு நீங்கியது.திடீ ரென்று ஒரு நாள் மங்களேஸ்வரி என் அருகில் வந்து அந்தத் தகவலை என் காதிற்குள்ளே சொன்னள். முதலில் எனக்குக் கூட அது ஆச்சரியமாகவும் நம்பமுடியாததாகவும் தான் இருந்தது. எப்போதும் ஆச்சரியமான செய்திகள் முதலில் நம்ப முடியாததாகத்தான் தோன்றும். -

“மங்களேஸ்வரி, உண்மையாகத் தான் சொல்கிருயா?” என்றுகேட்டேன். ‘பெண்கள் எதிலும் விளைய டுவார்கள். இதில் விளையாடமாட்டார்கள் எ ன் ரு ள் மங்களேஸ்வரி, எனக்கு உள்ளம் பூரித்தது. பிறப்பது ஆணுே,பெண்ணுே எது வானலும் அதையே கோட்டைக்கு அதிபதி ஆக்கிவிடுவது. என்றுபெருமூச்சு விட்டேன் பிள்ளைக்கலி தீர்ந்தாலே போது மென்று பேதலித்துக்கிடந்த உள்ளமல்லவா இது?

திடீரென்று எனக்கு வாத நோய் வந்துவிட்டது. ஆரு டக் காரர்கள் இதை அபசகுணம் என்றார்கள். அவள் கர்ப்

டிம் தரித்த நேரம் சரியில்லை என்று குதர்க்கம் பேசினர்கள்.

128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/129&oldid=698920" இலிருந்து மீள்விக்கப்பட்டது