பக்கம்:பாடகி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடகாத்திரமான எனக்கு இப்படி ஒரு நோய் வரும் என்று நான் கனவாவது காண மு. டி. யு மா? கை கால்க்ளை நீட்ட் முடியவில்லை. நாளுக்கு நாள் என்னுடைய நடை உடைகளில் தொய்வுகள் தோன்றின. ஒரு கட்டத்தில் படுத்த படுக்கை யாகவே ஆகிவிட்டேன்.

வயிற்றில் சிசுவோடு இருக்கும் என் மனைவிக்கு அருகிலி ருந்து முக்கனிகளை வாங்கிக் கொடுக்க வேண்டிய நான் முட மாகிப் போய் ஒரு மூலையில் கிடந்தேன். கோட்டை கொத் தளங்கள் எதையும் என்னுல் கவனிக்க முடியவில்லை. சேனை களுக்குள்ளே சச்சரவுகள் தலையெடுத்தன.

என் அருமை மனைவி மங்களேஸ்வரி ம ல ர் ந் த பூவாக இருந்தாலும் கண்ணிர்ப்பூவாகவே இருந்தாள். நா ன் என் னுடைய கடைசி நாட்களை நெருங்கிக் கொண்டு போவதாக நினைக்கவேயில்லை. துயரென்று தோன்றும் போதெல்லாம் பாரத்தை எங்கள் சேதுபதி மீதுதான் போட்டு விடுவது எங் கள் குலப் பழக்கம். அதைப்போலவே இப்போதும் பாரத்தை சேதுபதிமீது போட்டுவிட்டேன். சேதுபதி எது சொன்ன லும் அதுதான் எங்களுக்கு வேதவாக்கு. அன்றும், இன்றும் இதுதான் எங்கள் நம்பிக்கை.

எனக்கு இப்போது அடிக்கடி மயக்கம் வருகிறது. கார ணம் குடிப் பழக்கமோ, உடற்சோர்வோ அல்ல: என் காதுக் கெட்டிய தீயினும் கொடிய செய்திகள் என்னைச் சாம்பலாக் கிக்கொண்டிருந்தன. சேதுபதியிடத்தில் என் குடும்பத்தைப் பற்றிய புகார்களைக் கருத்த உடையான் அள்ளி அள்ளி வீசி யிருப்பதாகக் கேள்விப்பட்டேன். மங்களேஸ்வரி சோரம் போய்விட்டாளாம். மகாலெட்சுமியைப் பார்த்து அப்படிச் சொன்னுல் சேதுபதி நம்பியா விடுவார்?

மங்களேஸ்வரி கர்ப்பம் தரித்திருப்பதில் சந்தேகம் வருவ தாயிருந்தால் எனக்குத்தானே வரவேண்டும். எனக்குத்துளி யும் சந்தேகமில்லை. அவள் கர்ப்பம் தரித்திருப்பது எனக்குத் தான். பிறக்கப்போகும் குழந்தையும் எனக்குத்தான்.

129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/130&oldid=698923" இலிருந்து மீள்விக்கப்பட்டது