பக்கம்:பாடகி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஆலுைம் கருத்த உடையார் ஊரார் மத்தியில் பரப்பி வைத்திருக்கும் வதந்திகள் சில நேரங்களில் என்னையும் குழப் பத்தான் செய்தன. .

முதல் மூன்று மனைவிகளுக்குக் குழந்தைகளைக் கொடுக்க முடியாத எனக்கு மங்களேஸ்வரிக்கு மட்டும் எப்படிக் குழந் தை கொடுக்க முடிந்தது? இது எனக்குள் நானே எழுப்பிக் கொண்ட சந்தேகம். r

மங்களேஸ்வரி:

தமிழ்ப் பெண்கள் மலர்கள் போன்றவர்கள். மலர்கள் மாலையாகி எ ந் த ப் பெண்ணுடைய தலைக்காவது போய்விட் டால், பின் அவை கருகி விழும்வரை அவற்றிற்கு வாழ்வு அந்த முடியில்தான். பெண்ணினத்தில் தமிழினத்தைச்சார்ந்த பெண் களுக்குத்தான் இந்த இலக் கணம் பொருந்தும். கற்பையும் பொற்பையும் கல்விச்சாலையில்போதிக்கும் வெறும் பாடமாகக் கொள்ளாமல் அவற்றையும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறி கள் என்று மனதார நினைப்பது தமிழ்ப் பெண்கள்தான். அது வு ம் அரசகுலத்துப் பெண்கள் பற்றிச் சொல்லவேண்டுமா? நெறிகள் தானே அவர்களுக்கும் பாதுகாப்பு:அரண்கள். -

நான் கன்னிப் பெண்ணுக இருக்கும் போது, கருத்த உடை யார் என்னை விரும்பியது உண்மைதான். எனக்குக் கூட அவர் மீது ஜாடைமாடையாக ஒரு விருப்பம் தோன்றியது. இதைப் போய் என் தந்தையிடம் கூறி நான் வாதாட முடியுமா? பெற் ருேர்களால் வாங்கித்தரமுடியாத பொன்னுக்கும், பொருளுக் கும் கூட மகள் வாதாடுவாள்; ஆனல், இன்ன புருஷன்தான் வேண்டுமென்று எந்தத் த மி ழ் ப் பெண்ணும் வாதாடமாட் டர்ள். அந்தப் புருஷனுக்கே மகளைக் கொடுப்பதாக இருந்தா லும் பெரியவர்களாகவே பேசுவார்களே தவிர, பெண்ணிடம்

130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/131&oldid=698924" இலிருந்து மீள்விக்கப்பட்டது