பக்கம்:பாடகி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து கேட்கமாட்டார்கள். இதுதான் தமிழ்ப் பண்பின் தனிச் சிறப்புக்களில் கிரீடம் போன்றது. நானோ ஒரு நாட்டுத் தலை வனின் மகள். ஐயாயிரம் தலைக்கட்டு மக்கள் என் தந்தைக்கு மரியாதை செலுத்துகிரு.ர்கள். அப்பேர்ப்பட்ட ஒரு அதிபதியை எதிர்த்துப் பேசவோ, அவர் கருத்தை மறுத்துப் பேசவோ என் ல்ை எப்படி முடியும்? பூக்கள் செடியில் உள்ளவரை தோட்டக் காரனுக்குதானே சொந்தம்! - -

நான் உறங்காப் புலி சேர்வைக்கு மனைவியாகிவிட்டேன். ஆம்! நான் இப்போது கமுதி அதிபதியின் மனைவி. அவருக்கும், எனக்கும் வயதில் வித்தியாசம் உண்டு என்பது உண்மைதான், சிலநேரங்களில் பார்ப்பவர்களுக்கு அவர் எனக்குப் பொருத்த மற்றவராகக் கூடத் தெரியலாம் ஆனல் என்று அவரை நான் கணவகை ஏற்றுக்கொண்டேனே அது கல்வெட்டு மாதிரி என் , தலையெழுத்தாகிவிடுகிறதல்லவா? வ ய து, மூப்பு, பருவம், இளமை, அழகு எல்லாமே சம்பிரதாயம் என்னும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுவிடுகிறதே!

அவருடைய மூன்று மனைவிகளுக்கும் குழந்தைகளே இல்லை யென்று தெரிந்துதான் என் தந்தை அவருக்கு என்ன வாழ்க் கைப்பட வைத்தார். இ ைத ப் பெண்கள் இரண்டுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு இளம் பெண்ணே ஒரு தந்தை இப் படி பலியிடலாமா என்று கருதவும் செய்யலாம். அல்லது, ஏதா வது ஒரு நன்மையைக் கருதியல்லாமல் ஒரு தந்தை இப்படிச் செய்வாரா என்றும் கருதிக் கொள்ளலாம். நான் இந்த இரண்டு வரிசையிலும் சேராதவள். நான் வாழ்க்கையில் களிப்படையா விட்டாலும் சேதுபதியின் உற்ற நண்பராக உள்ள என் தந்தை யும், அதைப்போல் சேதுபதியின் வலதுகரமாக இருக்கும் கிமு திக் கோட்டை அதிபரும் சேர்ந்து எடுத்த முடிவை எங்கள் பாள்ேயப்பட்டின் நன்மையாகக் கருதினேனே. தவிர..இதல்ை என் வாழ்வு நிலவாகுமா, நாசமாகுமா என்பது பற்றிக் கருதவேயில்லை. . - ..?

131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/132&oldid=698925" இலிருந்து மீள்விக்கப்பட்டது