பக்கம்:பாடகி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரங்களுக்கும் குழந்தைகள் பிறந்திருக்கும்; நான் உறங்காப் புலி சேர்வைக்கு நாலாவது மனைவியாக வந்திருக்கவும் மாட் டேன். இந்த அவக்கேடும் எனக்கு நேர்ந்திருக்காது. இதை நான் நிரூபித்தாக வேண்டும். நிரூபித்தே தீருவேன். ஆனல், எங்கள் வழக்கைக் கேட்பவர்களுக்கு என்ன தோன்றும்? கருத்த உடை யார் கூறுவதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது? அவன் தான் உறங்காப்புலியின் முதல் மனேவிகளுக்கு ஏ ன் குழந்தை பிறக்கவில்லை என்று கேட்கிருனே என்று நினைப்பார்கள். இது சாட்சிகள் இல்லாத வழக்கு. வைத்தியரும் அவரது வைத்திய மும்தான் எனக்கு ஆதாரம் உத்தமிகளின் வாழ்க்கை வெற்றி களில் முடியும்; அல்லது தற்கொலேகளில் முடியும். இதுவரை நடந்த முடிவுகள் இப்படித்தான் முடிந்திருக்கின்றன. எ ன் வாழ்க்கை எப்படி முடிகிறதோ?

வைத்திய சிகாமணி

ஒருவன், பாவம் என்று பெயர் வாங்குவதைவிடப் பொல்லாதவன்’ என்று பெயர் வாங்குவதுதான் அழகு என்று எங்கள் மதுரை நாயக்க மன்னர் அடிக்கடி கூறுவார். ஆனல் பெண்கள் விஷயத்தில் அவர் அந் த ச் சித்தாந்தத்தை வலி யுறுத்த மாட்டார். அதில், அவர் கருத்து மாறு பாடானது. எந்தப் பெண்ணும் பொல்லாதவள் என்று பெயர் வாங்கக் கூடாது. அடக்கமானவள், நல்லவள் என்றுதான் பெயர் வாங்க வேண்டும்.’’ என்பதுதான் பெண்களைப் பற்றி எங்கள் மன்னரின் கருத்து. நான் ஏ ன் இவ்வளவு பீடிகை போடுகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா? எங்கள் நாயக்க மன்னரின் கருத்துப் படி, பழக்கப்பட்டவர்கள் உறங்காப்புலி சேர்வையும், அவர் மனைவி மங்களேஸ்வரியும் என்று சுட்டிக்காட்டுவதற்காகத் தான். - - -

உறங்காப்புலி உள்ளக் கிடக்கையைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். தொடுத்த போர்களிலெல்லாம் வெற்றி முகத்தையே கண்டவர் அவர். தனக்கு ஒரு வாரிசை உருவாக் கிடும் காரியத்தில் மட்டும் தோல்வி கண்டு தினம் தினம் துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/141&oldid=698935" இலிருந்து மீள்விக்கப்பட்டது