பக்கம்:பாடகி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடாள வேண்டும் என்ற ஆசையால்தான் இந்த அவதூறுகளே யெல்லாம் கிளப்புகிறார். எனக்குக் கோட்டை வேண்டாம். என் வயிற்றில் பிறந்த என் மகன் என் கணவர் உறங்காப்புலி சேர்வைக்குப் பிறந்தவன் என்று நான் நிரூபித்தால் போதும். எனக்குக் கற்புத் தான் உயர்ந்தது; கமுதிக்கோட்டை எனக்கு உயர்ந்ததல்ல. வழக்கு சேதுபதியின் கொலுமண்டபத்திற்கு வந்துவிட்டது. இதுவரை செங்கோல் வழு வா த சேதுபதி இதற்கு என்ன தீர்ப்பளிக்கப் போகிறார் என்று பார்க்கத்தானே போகிறேன். இந்தத் தீர்ப்பினல் ஆப்ப நாடே ஆருகப் பிரிந் தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. பெண்களுக்கு மானம் தான் உயிர்; மறவர் குலப் பெண்களுக்கு மானம்தான் பூர் வீகச் சொத்து. எங்கள் பகுதியில் ஒரு பழமொழி உண்டு -கற் புள்ளவள் கழுத்தில் கிடக்கும் கருப்பு மணிக்கு, கற்பிழந்தவள் கழுத்தில் கிடக்கும் வைர மாலேகூட ஈடாகாது என்று. அதைப் போலத்தான் எனக்குக் கமுதிக்கோட்டையும். கெட்டுப்போன வள் என்ற பெயரோடு கோட்டையில் வாழ்வதைவிட உத்தமி என்ற பெயரோடு ஊமத்தை ம. லி ந் த குட்டிச்சுவர்களுக்குள் குடியிருப்பது உத்தமம்.

சந்தர்ப்பம் சிலருக்குச் சாதகமாக அமையலாம். அதுவே சாசுவதமாகிவிடுமா? .ெ பா. ய், புயலைப்போல் வேகமானது. வீசிவிட்டு ஒய்ந்துவிடும். உண்மை அப்படிப்பட்டதல்ல. அது தென்றலைப்போல் மென்மையானது; நிரந்தரமானது.

எனக்குப் பிறந்த குழந்தை உறங்காப்புலி சேர்வைக்குத் தான் என்றால் அவருடைய முதல் மூன்று மனைவிகளுக்கும் ஏன் குழந்தை பிறக்கவில்லை? இதுதான் கருத்த உடையார் கிளப்பி, விட்ட புயலுக்கு அடிப்படை எங்கள் ரகசியம் எனக்கு மட்டும் தான் தெரியும். கோளாறு எனக்கு அல்ல. உறங்காப்புவியின் ரத்தத்தில்தான் கோளாறு. அதனுல்தான் வைத்தியர் அவருக்கு மட்டும் மருந்தைக்கொடுத்தார். இதே வைத்தியர் என்து கல் யாணத்திற்கு முன்பே கிடைத்திருந்தால் என்கண்வரின் மூத்த

139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/140&oldid=698934" இலிருந்து மீள்விக்கப்பட்டது