பக்கம்:பாடகி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமுதிக் கோட்டையின் அதிபரான உறங்காப்புலியின் புத்திர சோகத்தை எப்படியும் நீங்க ள் நீக்கி வைத்துவிட வேண்டும். நானோ அல்லது நீங்களோ இதில் தலையிட்டதாக வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. ஏனெனில் இதுவரை நாம் பிறர் அரண்மனை உள் விவகாரங்களில் தலையிட்ட தில்லை. அது மரபும் இல்லை” என்று எனக்கு ஆணை பிறப்பித் தார் எங்கள்.மன்னர்.

அந்த ஆணையை ஏற்றுக்கொண்டு பொழுது சாய்ந்த பிறகு கமுதிக்கு போனேன். உறங்காப்புலி என்னை உச்சி மகிழ வரவேற்றார். எங்கள் மன்னரின் நல்லெண்ணத்தையும் பெருந் தன்மையையும் அவர் வெகுவாக மெச்சிக் கொண்டார்.

அன்றுதான் நான் மங்களேஸ்வரியைப் பார்த்தேன். உண் மையிலேயே அவள் ஒரு தியாகிதான். ரதிக்கிளி மாதிரி இருக் கும் அவள், அவளைவிட வயதில் மூத்த ஒரு புலியைத் திருமணம் செய்துகொண்டிருப்பது பொருத்தமில்லாமல்தான் இருந்தது. என்ன செய்வது, சமுதாயம் சில வேளைகளில் ஊசி இழைக் குள் எப்படியோ ஒட்டகத்தைத் திணித்து விடுகிறது. யாரை நாசப்படுத்தியேனும் நெறிமுறைகளைக் கா ப் பா ற் றி க் கொள்ள வேண்டுமென்ற வேர் அரண்மனைகளிலும் கோட்டை களிலும், வேரூன்றிப் போய்க் கிடக்கிறதே. கம்பீரமான ஒரு யானையின் முதுகிலே ஒரு அம்பாரி இருந்தால்தானே எடுப் பாக இருக்கும். அம்பரிக்குப் பதிலாக ஒரு மாடப்புறா உட் கார்ந்திருந்தால் பொருந்துமா? உறங்காப்புலி மங்களேஸ்வரி ஜோடிப் பொருத்தம் எ ன க் கு அப்படித்தான் தோன்றியது. .

வைத்திய தொழில் எங்கள் குடும்பத் தொழில். எங்கள் பாட்டன் காலத்திலிருந்தே நாங்கள் மதுரை அரச வம்சத்து வைத்தியராகி விட்டோம். அரண்மனையில் அரச வம்சத்திற்கு குழந்தை இல்லாக் குறையை நீக்குவது தான் எங்களுக்குப் பிரதானமான தொழில். மதுரை நாயக்க வம்சத்தில் எந்த மன்னருக்கும் பிள்ளைப்பேறு கிடைக்காமல் இருந்ததில்லை. என் பாட்டன் காலத்திலிருந்து என் காலம்வரை நாங்க ள் அரண்மனைக்கு வெளியே யாருக்கும் ம ரு ந் து கொடுத்ததும் இல்லை; வைத்தியம் பார்த்ததும் இல்லை. இதுதான் மு. த ல்

142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/143&oldid=698937" இலிருந்து மீள்விக்கப்பட்டது