பக்கம்:பாடகி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடவை. அதுவும் எங்கள் மன்னர் விருப்பத்தின் பேரிலேயேதான் கொடுத்தேன். சி ல ர் திறமைகளைக் காசாக்கிக் கொள்கிறார் கள்; வேறு சிலர் திறமைகளை உதவிகளாக வழங்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ந ா ன் இரண்டிலும் சேராதவன். எங்கள் மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறவன்; அவ்வளவுதான். இதற்கெல்லாம் பணம் கே ட் ப .ெ த ன் று நானோ எனது முன்னோர்களோ விரும்பியிருப்பார்களானல் நாங்களும் இப்போது கோடீஸ்வரர்சளாக ஆ கி இருப்போம். மங்களேஸ்வரி மாங்கனி போன்றவள். அ வ ள் முகத்தில் இளமை ததும்பி நின்றது. முதிர்ச்சியின் முகப்பிற்குக்கூட கால் எடுத்து வைக்காத பிராயம் அ வ ள து பிராயம், அவளது இளமையும் சேர்ந்து என் மருந்துக்குப் பூரண பலன் அளிக்கு மென நான் நம்பிக்கை கொண்டிருந்தேன்.

உறங்காப்புலியாரே, நீங்கள் ஒரு கோட்டைக்கு அதிபதி உங்களுக்கு யோசனை கூற எனக்கு அருகதை இல்லை. இருந் தாலும் எ ன் தொழி ல் முறைப்படி ஒ ரு வார்த்தையைச் சொல்லிவைக்க என்னை அனுமதிப்பீர்கள் என்று கருதுகிறேன். என் ம ரு ந் தி ல் பாண்டித்தியக் கலப்பு எதுவும் இ ல் ைல. சாதாரண மருந்துதான். ஆனால் எங்கள் குலமுறைப்படி அது, ரகசியமாகத்தான் இருக்கும். என்னுடைய ஊழியர் ஒருவர் இங்கேயே தங்கியிருப்பார். அவர் தினந்தோறும் ம ரு ந் ைத அரைத்து, ஒரு மண்டலம், நாளைக்கு ஒரு தடவையோ இரண்டு தடவைகளோ சொடுப்பார். அதை அந்தப்புரத்தில் வைத்து நீங்கள் சாப்பிட வே எண் டு ம். மறுபடியும் கூறுகிறேன்; இது சாதாரணமான மருந்துதான். ஆ னா ல் வெளிக்குத் தெரியக் கூடாது; அதனால்தான் இந்த மருந்துக்கு இன்னும் மகத்துவம் போகவிலலை. இரண்டாவதாக எ ன் மருந்தினால் தான் குழந்தை பிறந்தது என்பதும் ர க சி ய மா. க த் தான் இருக்க வேண்டும். இது எங்கள் மன்னரின் கட்டளையும் கூட. என்று விளக்கமாகச் .ெ சா ல் லி விட்டு வந்தேன். உலகத்தில் உள்ள ஏ க்க ம் நிறைந்தவர்கள் அனைவரும் சில நேரங்களில் ஏமாளிகளைப் போலவும், கோழைகளைப் போலவும் குனிந்து விடுகிரு.ர்கள். வீரம் செறிந்த உறங்காப்புலி எ ன் னி ட ம் குழைந்து பேசியது எனக்கு வியப்பாகத் தோன்றியது.

143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/144&oldid=698938" இலிருந்து மீள்விக்கப்பட்டது