பக்கம்:பாடகி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை அரண்மனையில், ம ன் ன ரி ன் ஆணேப்படி சி ல முக்கியஸ்தர்களுக்கு நா ன் இந்த மருந்தைக் கொடுத்திருக்கி றேன். ஆனல் அவற்றில் ஒன்று கூட வ, ழ க் கு மன்றத்துக்கு வந்தது இல்லை.

ஆனல், மங்களேஸ்வரி விவகாரம் பிற்காலத்தில் வழக்கு மன்றத்திற்கு வந்துவிட்டசேதி கேட்டு நான் தூக்கமில்லாமல் அவதிப் பட்டேன். எங்கள் மன்னர், இரக்கப்பட்டுச் செ ய் த உதவி, ஒரு பெரிய வாரிசு உரிமைப் போரி ல் சிம்மாசனம் யாருக்கு என்ற சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிட்டது.

சில நாட்கள் கழித்து மன்னர் சேதுபதியிடமிருந்து என க்கு ஒரு ஒலை வந்தது. ‘எங்களது கமுதிக் கோ ட் ைட யி ல் எழுந்துள்ள வா ரி சு த் தகராறில் தா ங் க ளு ம் சம்பந்தப் பட்டிருப்பதாக வாக்கு மூ ல ங் க ள் தரப்பட்டிருக்கின்றன. ஆகவே தாங்கள் நேரில் ஆஜராகித் தங்கள் கருத்தைத் தெரி விக்கக் கோரப்படுகிறீர்கள்’ என்று சேதுபதியின் ஒ லை யி ல் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒலையைப் படித்ததும், என் கண்கள் கலங்கின. எழுந்துள்ள விபத்திலிருந்து என்னையும், மங்களேஸ்வரியையும் காப்பாற்ற எனது மூதாதையர்களை வேண்டிக் கொண்டேன். எ ங் க ள் பாட்டன் காலத்திலிருந்தே நாங்கள் கொடுத்து வரும் மருந்து பலருக்கு மக்கட்பேறுகளே வழங்கியிருக்கின்றன. ஆனல் மக்கட் பேறுகள் எங்கள் மருந்தினுல் தான் ஏற்பட்டன என்று நிரூபிப் பதற்கு என்னிடம் ஆதாரமில்லாமல் நான் த வி த் து க் கொண்டிருந்தேன். அதுவும் வழக்கு மன்றத்தில் பலர் முன்னிலே யில் அழியாமல் நிற்கக்கூடிய ஆதாரமல்லவா வேண்டும்! என் குழப்பத்தையும் கலக்கத்தையும் அறிந்த என் தாத்தா என்னேக் கூப்பிட்டழைத்தார். அவரிடம் விவரம் கூறி அபயம் அளிக்கும் படிக் கேட்டேன்.

‘முதல் முதல் நமது குடும்பம் இந்த அரண்மனேக்கு ராஜ வைத்தியராக வருவதற்கு எது காரணமாக இரு ந் த து தெரியுமா?’ என்று கேட்டார் என் தாத்தா.

எனக்குத் தெரியாததால் நான் பதில் கூருமல் இருந்தேன்.

144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/145&oldid=698939" இலிருந்து மீள்விக்கப்பட்டது