பக்கம்:பாடகி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாமணி, அதே பிரச்சினைதான் இப்போது உ ன க் கு வந்திருக்கிறது. நான் தான் நாயக்க மன்னருக்கு மு த ல் வைத்தியரானேன். குழந்தைப் பேறு கேட்டு அவர் பல இடங் களுக்கு அலைந்து திரிந்து விட்டு என்னிடம் வந்தார். என்னுடைய மருந்து அவருக்குக் குழந்தையைக் சொடுத்தது. எங்கும் எதிலும் எதிரிசள் முளைத்துவிடுவார்கள் அல்லவா? அவர்கள் மன்னருக் குத்துTபம் போட்டார்கள்.

‘குழந்தை பிறந்தது சரிதான். ஆனல், அது வைத்தியரின் மருந்துக்குத்தான் பிறந்தது என்று எப்படி நம்புவது?’ என்று கேள்வியைப் போட்டார் அமைச்சர். அவரைத் தவிர, வே று யாரும் மன்னரிடம் நெருக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற அற்பத்தனம் அந்த அமைச்சருக்கு. -

அமைச்சரின் கேள்வி என்னைத்திக்குமுக்காட வைத்தது. உடனே வீட்டுக்கு வந்து குவிந்துகிடந்த பழைய ஓலைச்சுவடிகளே யெல்லாம் துருவித் து ரு வி ப் பார்த்தேன். ஒரு அற்புதமான குறிப்புக் கிடைத்தது. அதையே அதாரமாக வைத்து அரசரி டம் வாதாடினேன். முதலில் திகிலடைந்து போயிருந்த மன்னர் வெற்றி என் பக்கம் வந்ததும் பெரு மூச்சுவிட்டு ஆறுதலடைந் தார். அன்றிலிருந்து அரண்மனையில் என் பெருமை உயர்ந்தது. என் பேரளுகிய உனக்கு இ ன்று அதே நிலை பயப்படாதே! சோதனையில் நீதான் வெற்றி பெறுவாய். நீ கமுதிப் போகும் போது என்னிடம் அந்த ஒலைச் சுவடியை வாங்கிக் கொண்டுபோ அதில் கண்டுள்ளப்படி சோதனைய நடத்திட மன்னரிடம் வேண்டிக் கொள்! நீதான் வெற்றி பெறுவாய்.

விஜய ரகு நாத சேதுபதி -

இதை ஒரு விசித்திரமான வழக்கு என்று சிலர் நினைக்கலாம். இது விசித்திரமான வ ழ க்க ல் ல; இராமநாதபுரத்தையே உலுக்கி எடுத்த வினயமான வ ழ க் கு என்றுதான் சொல்ல வேண்டும். தென்னிந்தியாவில் மட்டுபல்ல; வட இந்திய சாம் ராஜ்யங்களில்கூட இப்படி ஒரு வழக்கு நடந்திருக்காது; நீதி பதி ஸ்தானத்திலிருக்கும் என்னைப்போன்ற அரசனுக்கு இப்படி ஒரு தர்ம சங்கடமும் ஏற்பட்டிருக்காது. ஒரு குடும் பப்

145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/146&oldid=698940" இலிருந்து மீள்விக்கப்பட்டது