பக்கம்:பாடகி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணுக்கு புருஷன் வேண்டுமா பிள்ளை வேண்டுமா என்று தீர்மானிப்பது எவ்வளவு மனக்குழப்பத்தைத் தருமோ? அதை விடப் பெரிய குழப்பம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக நீதி தேவதை என்று ஒன்று இருப் பதை மறந்துவிடாதே, என்று கிழவன் சேதுபதி என் நெஞ்சில் தோன்றி உறுத்திக் கொண்டே இருந்தார்.

உறங்காப்புலி மரணத்திற்குப் பிறகு எழுந்த இந்த வழக்கு கமுதிக் கோட்டைக்குத் தலைவரை நியமிப்பதில் காலம் தவறச் செய்து கொண்டே வந்தது. வழக்கை விசாரிக்காமல்மங்களேஸ் வரியையும் அவள் மடியில் தவழ்ந்த குழந்தையையும் கோட்டை யிலிருந்து அகற்றிவைக்க அரசு நீதி இடம் தரவில்லை. அதனல் வழக்கின் முடிவிற்காக நான் காலம் தாழ்த்தவேண்டியதாயிற்று உறங்காப்புலிக்குப் பிறகு, மங்களேஸ்வரியே .ெ த டர் ந் து கோட்டைக்கு அதிபதியாக இருந்து வந்தாள். .

வழக்கை நான் விசாரனைக்கு எடுத்துக் கொண்டுவிட்டேன். எனக்கு ஆலோசனை கூறுவதற்காக சான்றாேர் நிறைந்த ஒரு ஆலோசனைக் குழுவையும் நான் நி ய மி த் து க் கொண் டேன். அந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் இதற்கு முன் பல வழக்குகளில் ஆலோசனைகளை வழங்கியவர்கள்; வயதில் எனக்கு மூத்தவர்கள். வழக்கில் நான் தவருண தீர்ப்பை வழங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் தக்க முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டேன். குற்றவாளியைக் கூட த் த ப் பி க் க விடலாம்; ஆ ஞ ல், நிரபராதியைத் தண்டித்துவிடக்கூடாது என்ற உலக நீதியைப் புரட்டிப் போட்டு விடக்கூடாது என்ற பயம்தான் என்னைப் பதைக்கவைத்தது. -

எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சிதான் ஏனென்றால் இரு சாராருமே, நான் நல்ல தீர்ப்பைத்தான் வழங்குவேன் எ ன் JD நம்பிக்கை தெரிவித்தது தான் அ ந் த மகிழ்ச்சிக்குக் காரணம். இது போன்ற வழக்குகளில்தான் மன்னர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. கருத்த உடையாரோ, கமுதியைக் கைப் பற்றி அதில் கொலுவிருக்க முகூர்த்தம் பார்த்துக்கொண்டிருக் கிறார், மங்களேஸ்வரியோ ம ற வர் குல மங்கையர்க்கு அவ. மானத்தை ஏற்படுத்திய கருத்த உடையாரை தீர்ப்புக்குப் பின் நீண்ட நாள் வாழவிடமாட்டேன் என்று வீர சபதம் பூ ண் டு

146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/147&oldid=698941" இலிருந்து மீள்விக்கப்பட்டது