பக்கம்:பாடகி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிற்கிருள். எது எப்படி இருந்தாலும், ஒரு கோட்டைத் தலை வனின் மனைவியைப் பற்றிய வழக்கை நான் மட்டும் விசாரித்து நீதி வழங்குவது முறையாகாது என்பதால்தான் ஒரு நியாய சபையையே நிறுவிக்கொண்டேன். மங்களேஸ்வரியின் கண்ணிர் பெரிதா, மறவர் நாட்டு மானம் பெரிதா என்றால் இரண்டுக் கும் மேலாக நீதிதான் பெரிது என்று கருதக்கூடிய பரம்பரை எங்கள் பரம்பரை. அதனுல் தான் ஒவ்வொரு கட்டத்திலும் நான் துணுக்குற்றுப் போனேன்.

மங்களேஸ்வரி, மதுரை வைத்தியன் ஒருவனுல் கெடுக்கப் பட்டு விட்டாள் என்ற குற்றச்சாட்டு எனக்கு முதல்முதலில் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தாலும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் அந்த அதிர்ச்சி படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. ஏனென்றால் அந்த இளைஞரே வழக்காடு மன்றத்தில் ஆஜராகி வாதாட முன் வந்துவிட்டார். அந்த வைத்திய இளைஞர் சாதாரணமாணவர் அ ல் ல. மதுரையை ஆளும் விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் அரண் மனே வைத்தியர் அந்த இளைஞர்.

அவர் வந்ததும் சபையை வணங்கி அ வ ர து வாக்கு மூலத்தைக் கொடுத்தார். அ ைவ யி ன் ஒரு பகுதியில் கருத்த உடையார் சிவந்த கண்களோடு உட்கார்ந்திருந்தார். ஒரு திரைக்குப் பி ன் ைல் மடியில் குழந்தையுடன் மங்களேஸ்வரி உட்கார்ந்திருந்தாள்.

வைத்தியர் சொன்னர்-பிரபு நான் மதுரை மண்டலாதி பதி மாட்சிமை தங்கிய விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் அரண்மனை வைத்தியன். மு ன் று தலைமுறைகளாக நாங்கள் ஆஸ்தான வைத்தியர்களாக இருந்து வருகிருேம். எ ங் கள் குடும் பம் எவருக்கும் துரோகம் இழைத்திராத குடும்பம்: ஏனெனில், து ரோக ம் எப்போதாவது ஒரு நாளைக்குத் திருப்பித் தாக்காமல் வி டா து என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். நான் முடிவு செய்திருந்தால் இந் த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று ஒரே வார்த்தையில் கூறி வி ட் டு ப் போய்விடலாம். ஆனல், நான் பொறுப்பைத் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. மதுரை நாயக்க வம்சத்தினர் தவிர வேறு எவருக்கும் செய்தறியாத உதவியைக் கமுதிக்

147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/148&oldid=698942" இலிருந்து மீள்விக்கப்பட்டது