பக்கம்:பாடகி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டை உறங்காப்புவி சேர்வைக்கு செய்து, அதில் வெற்றி யும் கண்டேன், என்பதை நிரூபித்துக் காட்டு வதற்காகத் தான் நான் விசாரணையில் முழுப்பங்குபெற வந்திருக்கிறேன். நான் உறங்காப்புலி குடும்பத்திற்குத் துரோகம் செய்தேன், மங்களேஸ்வரியை மயக்கினேன் என்பதெல்லாம் தெய்வத் திற்கு அடுக்காத அவதூறுகள். இதை, என் பே ச் சி ைல் மட்டும் கூறிவிட்டு நான் தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை. என்னைவிட ஒரு பெண்ணின் மா ன ம் முக்கியம் என்பதால் அந்தப் பெண்ணும் நிரபராதி என்பதை ருசுப்படுத்தி விட்டுப் போகவே நான் வந்திருக்கிறேன். நான் தோற்றுப் போனல் என் பிணத்தை ஊர்வலமாகக் கொண்டு போக நான் சம்மதிக்கிறேன். இது என் குலத்தொழில் மீது ஆணை'’ என்று மதுரை வைத்தியர் மனமுருகப் பேசினர்.

இந்தக் கட்டத்தில் கருத்த உடையார் குறுக்கிட்டார் ‘இது மாய்மாலம்; இவருடைய மருந்தினுல்தான் மங்களேஸ் வரிக்கு குழந்தை பிறந்தது என்பதை அாசவையிலே நிரூபித் துக்காட்டவேண்டும்’ எ ன் று குமுறினர். உடனே நியாய சபை அவரைத் தடுத்து நிறுத்தி இது போர்க்களமல்ல; நியாயசபை’ என்பதை ஞாபகப்படுத்தியது.

- ‘வைத்தியரே, இது சாதாரணமான வழக்கல்ல; வாரிசு ரிமைப் போராட்டம். இந்த வழக்கு மறவர் மண்ணுக்குள் ளேயே ஒரு பெரும் பிளவை உண்டுபண்ணியிருக்கிறது. ஆகவே, உன்னுடைய மருந்தினல் தான் மங்களேஸ்வரிக்கு குழந்தை பிறந்தது என்பதை உன்ல்ை நிரூபிக்க முடியுமா? இதில் ஒளிவு, மறைவு தயவு தாட்சண்யம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று நான் இடைமறித்துப் பேசினேன். வைத்தியர் சிறிதும் கலங்கவில்லை. அவர் மிகவும் தெளிவாகப் பேசினர். பலர் முன்னிலையில் நிருபித்தால்தானே மங்களேஸ் வரியின் மாண்பும் பலருக்குத் தெரியும் என்பதை உணர்ந்த வன் நான். இல்லாவிட்டால் தங்களை மட்டும் சந்தித்து உண் மையை உணர்த்திவிட்டுப் போயிருக்க முடியும். இது ஒரு பெண்ணின் ஜீவனம்சப்பிரச்சினை அல்ல. ஒரு நாட்டின் மானப்பிரச்சினை. இல்லாவிட்டால் இந்த வயதில் உங்கள் முன் வ்ாதாட வந்திருப்பேன பிரபு’ என்றார் வைத்தியர்.

148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/149&oldid=698943" இலிருந்து மீள்விக்கப்பட்டது