பக்கம்:பாடகி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையிடையே கருத்த உடையார் பேசினர். திரைக்குப் பின்னல் இருந்து தேம்பி அழும் மங்களேஸ்வரியிள் புலம்ப லும் எனக்குக் கேட்டது.

மீண்டும் வைத்திய இளைஞர் பேசினர்.

“இதோ என் கையில் பழங்காலச் சுவடி ஒன்று இருக் கிறது. இதை சபையோர் முன்னிலையில் மன்னர் முன்சமர்ப் பிக்கிறேன். மன்னர் அந்தச் சுவடியை படித்துப் பார்க்குமுன் இ ந் த அவையோர் முன்னிலையில் இன்னொரு சோதனையும் நடத்திக்காட்ட முனைகிறேன்’ என்று கூறிய வை த் தி ய இளைஞர், மங்களேஸ்வரியின் குழந்தையின் வயதிற்கு இணை யாக இன்னொரு குழந்தையைச் சபைக்குக் கொண்டுவரக் கேட்டுக் கொண்டார். அதன்படி இன்னெரு குழந்தையும் கொண்டு வரப்பட்டது.

‘மன்னர் பிரான் அவர்களே, இந்த இரண்டு குழந்தை களையும் வியர்க்க வியர்க்க விளையாட விடவேண்டும். நன்றாக வியர்த்துக்கொட்டும் போது, தனித்தனியாக அந்தக் குழந் தைகளின் வியர்வைத் துளிகளை இங்கே கூடியிருக்கும் நியாய சபை நிதானமாக அமர்ந்து நுகர்ந்து பார்க்கவேண்டும். சாதாரணமாக வியர்வைத் து வரி க ளி ல் உப்புக்கரிக்கும் என்பது உலகறிந்த உண்மை. மங்களேஸ்வரிக்குப் பிறந்திருக் கும் குழந்தை என் மருந்துக்குத்தான் பிறந்தது எ ன் ரு ல் அந்தக் குழந்தையின் வியர்வையில் மாறுபட்ட வா ைட வீசும்’ என்றார் வைத்தியர்.

வைத்தியரின் வாதம் கே ட் டு நா ன் திகைத்துப் போனேன். அடுத்த கனமே நியாய சபையை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவை மங்களேஸ்வரியின் குழந்தையின் வியர் வையைச் சோதிப்பதற்கும், அடுத்த பிரிவை அடுத்த குழந் தையின் வியர்வையைச் சோதிப்பதற்குமாக நி ய ம ன ம் செய்தேன். சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இது வழக்காக இருந்தாலும் சபைக்கு ஒரு நாடகம் போலத் தோன்றியது. குழந்தைகள் விளையாடின; சிரிக்கச் சிரிக்க விளையாடின. சபை கல கலப்படைந்தது. இரண்டு நாழிகைகளுக்குப் பிறகு

149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/150&oldid=698945" இலிருந்து மீள்விக்கப்பட்டது