பக்கம்:பாடகி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியாயசபையினர் தனித்தனியாகத் தங்கள் த ங் க ள் குறிப் புகளே என்னிடம் வழங்கினர்கள்.

இப்போது வைத்திய இளைஞர் குறுக்கிட்டுப் பேசினர். மன்னர் அவர்கள் குறிப்புக்களைப் படித்துக்காட்டும் முன்னர், நான் சமர்ப்பித்திருக்கும் ஏட்டுச் சுவடியில் நான் கோடிட்டுக் காட்டியுள்ள பகுதியை முதலில் அவைக்கு அறிவித்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நான் படித்தேன்; அ தி ல் ‘விஜயநகர சாம்ராஜ்யத் திலிருந்து வரவழைக்கப்பட்டு, ம து ைர நாயக்க வம்சத் தினருக்கு மட்டும் பயன்படுத்தப்படும் இந்தப் புத்திரபாக்கிய மருந்து முக்கால் பங்கு வெங்காயத்தினால் செய்யப்பட்டது. இந்த மருந்தை ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தைந்து நாள் புருஷர்கள் சாப்பிட்டு மனைவியோடு மகிழ்ச்சியோடு இல்லறம் நடத்தில்ை குழந்தை உற்பத்தியாகும். இந்த மருந்தினுல்தான் குழந்தை பிறந்தது என்பதை பரிசோதிக்க விரும்பினல் அந்தக் குழந்தையின் வியர்வையில் வெங்காய நாற்றம் அடிக்கும். இதுதான் இந்த மருந்துக்குள்ள மூல ஆதாரம்’. .

நான் படித்து முடிக்கு முன் நியாய சபையின் ஒரு சாரார் திகைப்பில் ஆழ்ந்து போனர்கள்: -

நான் நியாய சபையை ஏறிட்டுப் பார்த்தேன். மங்களேஸ்வரியின் குழந்தையைச் சோதித்தவர்கள் அந்த ஏட்டுச் சுவடியில் கண்டிருப்பது நூ ற் று க் கு நூறு உண்மைதான். மங்களேஸ்வரியின் குழந்தை வடித்த வியர் வையில் வெங்காய வாடை பின்னிப் பிணைந்து இருக்கிறது என்கிறார்கள். -

அடுத்த குழந்தையின் வியர்வையைச் சோதித்தவர்கள் அதில் வெறும் உப்புக்கரிப்புத்தான் இருக்கிறது என்றனர். நான் தீர்ப்பு வழங்குவதற்கு வசதியாக ஆதாரம்கிடைத்தது. தீர்ப்பு-மங்களேஸ்வரியே தொடர்ந்து கோட்டைக்கு அதிபதியாக இருக்கவேண்டும் என்பதுதான் நான் அளித்த தீர்ப்பு. - ,

150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/151&oldid=698946" இலிருந்து மீள்விக்கப்பட்டது