பக்கம்:பாடகி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடகி

அவள் இசைவாணி.

பிசிறு தட்டாத அமுதக் குரல் அவளுடையது. அழகிலும் அவள் நிகரற்று விளங்கிள்ை. மலை முகட்டின் சிகரத்திலிருந்து உருகி வரும் வெள்ளி ரசம் போல் அவளது நெடிய கூந்தல் சு ரு ள் சுருளாகக் காணப்படுகிறது. அவளுடைய நெற்றித் திலகம் சந்தனக் கட்டையில் சிவப்புக்கல் பதித்திருப்பது போல் தெரியும். அவளது சிரிப்புக்கு முல்லைப் பூவையும், செவ்விதழுக்கு ஆரஞ்சுச் சுளைகளையுமே உதாரணங்களாகச் சொல்ல முடியும்.

அந்தக் காலத்துக் கர்னடக இசை வாணிகளுக்கே உரித் தான மூன்று கல் முக்குத்தி, முத்துவடம் அவளுடைய அழ கிற்கு மேலும் மெருகூட்டிக் கொண்டிருந்தன.

வழவழப்பான தரையில் எலுமிச்சைப் பழத்தை உருட்டி விட்டதைப் போல் அவள் நடப்பாள். அவளது நடை பார்ப் போருக்கு அவள் பாடகியா அல்லது பரத நாட்டிய கலாநிதியா என்ற ஐயத்தைக் கிளறும். அவள் ஒடும் பொழுதும் நடக்கும் பொழுதும் கால் கொலுசுகள் காலம் தவருமல் தாளம் போடும். ஆனல் அவள் நாட்டியக்காரியல்ல; பாடகிதான். பாடகி என்றாலும் கானக்குயில்! அவளுடைய இனிய குரல் பச்சைப் பாம்பின் ஒட்டத்தைப்போல், பெருகி வரும் பேராற் றின் கிளை நதியைப் போல் நெளிந்து நெளிந்து ஒடக்கூடியது. அவள் சுர ம் பாடுகையில் வீணையின் மணிக்குரல் கேட்கும்; நாதசுரத்தின் கமகமப்புத் தெரியும். தனித்திருந்து அவள் முனகும் போது வெகுதொலைவில் யாரோ வயலின் வாசிப்பது போல் மனதுக்குப்படும்.

இசைக்கு - குதித்தோடும் கன்றை நிறுத்தும் சக்தி, குத்த வரும் காளையைத் தடுத்தாளும் மகிமை, கொத்த வரும் பாம்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/6&oldid=698995" இலிருந்து மீள்விக்கப்பட்டது