பக்கம்:பாடகி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைப் படுக்க வைக்கும் ஆற்றல் உண்டென்றால் - இந்த மூன்று சக்தி களி லும் அவளே மிஞ்சுபவர்கள் யாரும் பிறந்திருக்க முடியாது.

அவள் அடான ராகம் பாடினல் ஆடவரையும் பெண்டி ரையும் அடலேருய் ஆக்கி விடுவாள். அப்போது அவள் குரலில் போர் முரசு ஒலிக்கிறது. அவள் முகாரி பாடினல் எதிரே அமர்ந் திருப்பவர்கள் எதையோ இழந்தவர்களைப் போல் கண் கலங்கி விடுவார்கள். நீலாம்பரி பாடத் தொடங்கி விட்டாலோ, இசை கேட்கும் பெண்கள் தங்கள் மடியில் கிடக்கும் மழலைகளைத் தட்டிக் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள்.

கச்சேரிக் கொட்டகையைச் சிரிக்க வைத்துத் தானும் சிரிப் பாள். அடுத்த கணத்தில் அதே கச்சேரிக் கொட்டகையைத் தேம்ப வைத்துத் தானும் தேம்புவாள். நிகழ்ச்சி முடிந்து அவள் போகும்போது அவளுடைய கார் புழுதிக்குள் மறையும்வரை ரசிகர்கள் சிலையாக நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அத்தகைய கோகில கான இசைவாணி இப்போது பாடுவ தில்லை. ஊமையைப் போல் காணப்படுகிருள். இயந்திரத்தைப் போல் காலத்தைக் கழிக்கிருள். நிலவோடு பேசியவள், நீல மேகத் தாரகைகளை அழைத்தவள், தன் இன்பக் கு ர லா ல் ஊரையே துயிலச் செய்தவள் இப்போது ஊமையாகி விட் டாளே ஏன்?

பொது நலத்திற்காக இருந்த பூங்கா அழிந்து விட்டதைப் போல காதலர்கள் வருந்தினர்; கல்லூரி மன்றங்கள் சோர்ந்து கிடந்தன. குயிலே, நீ பாடமாட்டாயா? என்று கவிகள் துக் கப்பட்டனர். ஏன் இந்தச் சோகம்?

வைகைக் கரையில் ஒரு சிங்காரச் சிற்றுார். அந்த ஊரைச் சிலைமான் என்று அழைக்கிரு.ர்கள். அழகிய தமிழ்ச் சொற்களே மகுடங்களாகக்கொண்ட ஊர்களில் அதுவும் ஒன்று. தென்னங் கீற்று வீடுகளுக்கு மத்தியில் வண்ணம் பூசிய தெப்பத்தைப் போல ஒரு அழகிய மாடிவீடு தெரிகிறது.

அழகுக்காகக் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில் வைக்கப் பட்டிருக்கும் பொம்மைகள் கூட கைகளில் வீணைகளே வைத்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/7&oldid=699007" இலிருந்து மீள்விக்கப்பட்டது