பக்கம்:பாடகி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்கொண்டிருக்கின்றன. வீட்டு முகப்பில் தொங்கிய ஒரு நீலத் திரையில் இசைக் கலைஞன் ஒருவன் தன் சிஷ்யைக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது போல் சித்திரம் தீட்டுப்பட்டிருக்கிறது. அப்படியானல் அதுதான் அந்தப் பாடகியின் வாசஸ்தலமாக இருக்குமோ!

கோகிலம்!

கவர்ச்சியான அவளது குரலுக்கு ஏற்ற பெயர்.

பத்தாண்டுகளுக்கு முன் கோகிலம் அந்தக் கிராமத்திற்குக் கச்சேரிக்காக வந்தாள் அப்போது அவள் தங்கியிருந்த இடம் இசையிலே அளவுகடந்த பற்றுதல் கொண்ட ஒரு ஜமீன்தாரின் பங்களா அவருக்குப் பாடத் தெரியாது. ஆ ன லும் அவர் ‘சங்கீதம் சரவணபவா’ என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந் தார். பாம்பாட்டி முதல் பாடத் தெரிந்தவர்கள் வரை அவரது இசைப் பைத்தியம் பரவியிருந்தது. அதுவும் வாய்ப்பா ட் டு என்றால் அவருக்கு உயிர். இந்த சின்ன வயதில் சரவணபவா விற்கு இவ்வளவு இசை ஞானம் வளர்ந்ததைப்பற்றி வியப்படை யாதவர்களே இல்லை. மற்றவர்களைப் போலத்தான் அந்த ஊர்க்கச்சேரிக்கு வந்திருந்த கோகிலமும் ஆச்சரியப் பட்டாள். அழகான வீடு ராஜபோக வாழ்வு, ஊரிலே நல்ல கீர்த்தி -இருந்தும் அவர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளா மல் இருக்கிறார் - அண்டை வீட்டுக் காரருக்குக் கூட ஏற படாத இந்தச் சந்தேகம் இசைவாணிக்கு ஏற்பட்டது.

இரவு நேரம்! நட்சத்திரங்கள் அவளைக் கச்சேரிக்குப் போக வேண்டும் என்பதை உணர்த்தின. அவள் கச்சேரிக்குப் புறப்பட்டு விட் டாள். சரவணபவா எதையோ ஒரு கீர்த்தனையை முணகிக் கொண்டே கச்சேரி கேட்க ஆயத்தமாகும் நிலையில் பரபரப் பாகக் காணப்பட்டார்.

சரவணபவாவின் மு ணு மு னு ப் பு இசைவாணியின் உள்ளத்தில் எறும்பு ஊர்வது போன்ற உண்ர்ச்சியை உண் டாக்கியது. அவள் உற்றுக் கவனித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/8&oldid=699018" இலிருந்து மீள்விக்கப்பட்டது