பக்கம்:பாடகி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'முப்பது வயதாகிவிட்டது, இன்னும் நான் கலியாணம் செய்து கொள்ளாமலிருக்கிறேன். இப்படியே இருந்தால் உற வினர்கள் என்னுடைய பிறப்பிலேயே சந்தேகம் கொண்டு விடுவார்கள். ஒரு பணக்காரன், அதுவும் பார்ப்பதற்கு வசீகர மான தோற்றமுடையவன். ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலிருக்கிருன்? இவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல அலி போலிருக்கிறது என்று கேலிபேச ஆரம்பித்து விடுவார் களே; என்னுடைய இலட்சியம் யாருக்குத் தெரியப்போகிறது? இந்த சரவணபவா ஒரு சங்கீத கலாநிதியைத்தான் திருமணம் செய்யக் காத்திருக்கிருன் என்று த ண் .ே டா ரா ப் போட முடியுமா?

-இதுதான் சரவணபவாவின் கொள்கை என்று இசை வா னி க் கு அப்போதுதான் தெரிந்தது. அவள் மெதுவாக எழுந்து சென்று மறைந்து கொண்டாள். அவள் பின்னுலே நிற்பது அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? ஒருவேளை இசை வாணி கூந்தலில் குடியிருந்த முல்லைப்பூ அவள் நி ற் ப ைத அவனுக்குக் காட்டி விட்டதோ?

சரவணபவா அருள் பெற்றவனைப் போல் திரும்பிப் பார்த் தர்ன். சங்கீதமே பெண் உருவில் வந்து நிற்பதுபோல அவனுக் குத்தெரிந்தது. அவனுடைய முகத்திலே ஒரு மயக்கம்! அவனது கண்களிலே ஒரு மின்வெட்டு:

‘கோகிலா! நீ எப்படி இங்கே வந்தாய்?” கோகிலம் பதில் சொல்லவில்லை. “என்னுடைய மனத்தாங்கலை உனக்கு எப்படிச் சொல்லு வது என்றிருந்தேன்? என்னுடைய புலம்பலே உனக்குப் புரிய வைத்து விட்டது. தெய்வத்தின் உதவி பைத்தியங்களுக்கும் கிடைக்கும் என்பதை இப்போது உணருகிறேன்”- சரவணபவா தாகம் நிறைந்தவன் போல் தவித்துக்கொண்டே பேசினன்.

வசந்தத்தின் விளிம்பிலே மதிமயங்கி விளையாடிக் கொண் டிருக்கும் பருவத்தில் திளைத்து நின்ற கோகிலம் அந்த இடத்தி லேயே மனக்கோட்டை கட்டத் தொடங்கினுள். - அரண் மனை போன்ற வீடு, அரசபோக வாழ்க்கை; தினசரி கச்சேரி

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/9&oldid=699029" இலிருந்து மீள்விக்கப்பட்டது