பக்கம்:பாடகி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடத்தினல்கூட இவ்வளவு சொத்துக்களைச் சேகரிக்க முடியாது -கோகிலத்தின் இன்ப நினைவுகள் முடியவில்லை. அதற்குள்ளாக கச்சேரிக் கொட்டகையிலிருந்து அ வ ளை அழைத்துப்போக ஆள் வந்து விடடது.

பொழுது விடிந்தது. இரவு முழுவதும் இசையைக் குடித்திருந்த அந்தக் கிராமம், சூரியோதயம் ஆகியும் மயக்கம் தெளியாமல் இருந்தது.

சரவணபவா சிறைச்சாலைக்குச் செல்ல நேரம் குறிக்கப் பட்ட கைதியைப்போல் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

கோகிலம் புறப்படப் போகிருள்; வண்ணப்பட்டு நூலைப் போன்ற அவளுடைய மெல்லிய குரலும் அவளோடு போகப் போகிறது; அவள் இந்தக் கிராமத்திற்கு வந்ததிலிருந்து நான் என் உணவைப்பற்றியோ, உடையைப்பற்றியோ கவனிக்க வில்லை. மேகத்திரளுக்குள் ஊடுருவிப்பறக்கும் பருந்தைப்போல நான் பொழுதைக் கழித்தேன். என் உள்ளத்தைப் பூட்டிவிட்டு அவள் சாவியைக் கொண்டு போகப் போகிருள்’ - சரவணப வாவின் இந்த ஏக்கத்திற்கு ஒலி இருந்திருக்குமானல் கோகிலத் தின் காது செவிடாகக் கூட ஆகியிருக்கும்.

வசந்தகோகிலம் தன்னிடம் விடை பெற்றுச் செல்ல வரு வாள். அவளே வெறுங்கையோடு அனுப்பக் கூடாது என்று எண்ணி அவளுக்கு ஒரு விலையுயர்ந்த காசு மாலையை அன்பளிப் பாகக் கொடுப்பதற்குக் காத்திருந்தான் சரவணபவா. -

ஆனல் நடந்ததென்ன? இசைவாணி வசந்தகோகிலம் பனி த் துளி தோய்ந்த ரோஜா மாலையோடு, மேகத்திலிருந்து குதித்ததைப்போல சரவணபவாவின் எதிரே வந்து நின்றாள்.

சரவணபவா அவன் கண்களையே நம்பவில்லை. தன்னுடைய கனவுதான் இப்படிக் கானலாகத் தோன்றுகிறதோ என்று அவன் குழம்பினன்.

‘இசைவாணி!” -அவள் அசையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/10&oldid=698888" இலிருந்து மீள்விக்கப்பட்டது