பக்கம்:பாடகி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலேசாகச் சிரித்தாள். பெண்மைக்குத்தான் எவ்வளவு அற்புதமான சக்தி. ஆடவர்கள் அரைமணிநேரம் பேசிக்காட்டு வதை பெண்கள் அரைப்புன்னகையிலேயே பேசிக்காட்டி விடு கிரு.ர்கள்.

சரவணபவா இருக்கையிலிருந்து எழுந்து துணைப்பிடித்தான் அவன் ஏன் துணைப் பிடிக்கவேண்டும்? தடுமாற்றமா? இல்லை; தன் முன்னே கோகிலமாகத் தோன்றுவது உண்மையான உரு. வந்தான என்பதை அறிந்துகொள்ளவே அவன் தூணைப் பிடித் தான். அப்போது சரவணபவாவின் அன்னை அங்கே வந்தாள்.

“சரவணு கோகிலா ராத்திரியே என்னிடம் சொல்லி விட் டாள். உன்னுடைய இலட்சியம் நிறைவேறி விட்டது. அவள் ஊருக்குத் திரும்பப்போவதில்லை’-என்று பெருமூச்சுக்கு மத்தி யில் அவனுடைய தாயார் அளந்து பேசினுள்.

அ ந் த மாளிகையில் பூசப்பட்டிருந்த வண்ணத்தையும் மிஞ்சி தினந்தோறும் அந்தச் சுவர்களில் கோகிலாவின் இசை படிந்துகொண்டிருந்தது. கோகிலத்தின் குரல் குளிர்ந்த இரவு நேரத்தில் அந்தக்கிராமத்துக்கே தாலாட்டாக அமைந்தது.

மலர்ந்து கொட்டிய மகிழம் பூக்களைப் போல அவளுடைய இசை, கோயில், குளம், மாளிகைகள், சேரிகள் அனைத்திலும் மணத்தது. திரவியங்களுக்குப் பாடி வந்த வசந்த கோகிலம் பசுஞ்சோலைகளுக்கு மத்தியில் அவளுடைய உள்ளத்தில் இன் ப்ம் மகிழும் போது சுதந்திரமாகப் பாடும் கருங்குயிலாகிவிட் டாள். அமுத இசையில் மயங்கிக் கிடந்த அக்பரின் மாளிகை யைப்போல் சரவணபவாவின் மாடிவீடு சங்கீத்த்தில் மிதக்கும் தெப்பமாகவே இருந்தது. அவள் இப்போது கச்சேரிக்குப்போவ தில்லை. காசுக்காகப் பாடிய அவள், காலமெல்லாம் செலவழித் தாலும் கரையாத செல்வம் தன் காலடியில் குவிந்திருக்கும் போது இப்போது எதற்காக அவள் காசுக்குப் பாடவேண்டும்? பல்லாயிரக்கணக்கான மக்களின் கையொலிக்கிடையே இழையோடிய அவளுடைய கு ர ல் தன்னை ஆட்கொண்ட ஒரே ஒரு இதயத்திற்காக மட்டும் ஒலித்தது.

‘நீங்கள் ஏன் பொதுமேடைகளுக்குப் பாடவருவதில்லை

I0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/11&oldid=698899" இலிருந்து மீள்விக்கப்பட்டது