பக்கம்:பாடகி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று யாராவது கேட்டால், பொழுது போக்கிற்காக என் னுடைய குரலே பத்தாயிரம்பேர் ரசிப்பதைவிட, வாழ்க்கையின் ஊன்றுகோலாக ம தி க்கு ம் ஒருவருடைய ரசிகத்தன்மையே எனக்கு மேலானது’ - என்று அவள் சொன்னுள்.

“பூபாளம் பாடி அவரது பூ விழிகளே மலர வைக்கிறேன். நீலாம்பரி பாடி அவரை நித்திரையில் ஆழ்த்துகிறேன். இதை விட எனக்கென்ன கடமையிருக்கிறது? - என்று அவ ள் ஜானகியாக, சாவித்திரியாக, நளாயினியாகப் பேசிள்ை.

என்று, கோகிலம் சரவணபவாவின் வீட்டிற்கு வந்தாளோ அன்று முதல் அவன் வீட்டைவிட்டு வெளியேறுவதில்லை. அவ னது நண்பர்கள் சரவணபவா நொண்டியாகிவிட்டான? அல் லது நடமாடமுடியாத அளவிற்கு அவனுக்கு நேத்திரம் கெட்டு விட்டதா? ஏன் இப்படி அடைக்கோழியாகிவிட்டான்?-என்று கேலி செய்யத் தொடங்கிவிட்டார்கள். சரவணபவாவிற்கு இதெல்லாம் எங்கே எட்டப்போகிறது? மெலிந்த ஒற்றை நாடி சரீரமுடைய கோகிலம் பாடும்போது சரவணபவா பாம்பாக ஆடினன். .

தூங்குகிறவன் நெற்றி வியர்த்துக் கொட்டுவதைப் போல இசையிலே மயங்கி ஆடும் அவனுடைய நெற்றியும் வியர்த்துக் கொட்டியது. கண்ணுடிப் பாத்திரத்திற்குள் மூடிவைத்திருக்கும் இனிப்புப் பதார்த்தத்தைப்போல மனதை இழுக்கும் கோகி லத்தை அவன் ரசிக்கவில்லை. அவளது தேன் குரலேயும் அந்தக் குரலின் தெளிவையுமே அவன் ரசித்தான்.

புருஷன் தன்னைப் பார்த்துச் சிரித்தால் அவன் தன்னையே அதிகமாக நேசிக்கிருன், தன் மீது மையல் கொண்டிருக்கிருன் என்று நினைக்கும் சாதாரணப்பெண்னைப்போலவே கோகிலமும் நினைத்தாள் ராகங்களில் புதிய நுணுக்கங்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று துடிக்கின்ற சங்கீதமேதையான அவள் தன்னை ஆட்கொண்டவனின் பார் ைவ யி ல் உள்ள அந்தரங்கத்தை ஆராயவில்லை. அவளுக்கெதிரே உட்கார்ந்து அவன் ஆடுது யும், ஆகா! ஊசு. என்று சபாஷ் போடுவதையுமே எண்ணி மகிழ்ந்தாள். தன்னுடைய குரல் அவளைக் கடவுள் மடியிலேயே கொண்டு சேர்த்துவிட்டதாக நினைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/12&oldid=698910" இலிருந்து மீள்விக்கப்பட்டது