பக்கம்:பாடகி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் அவள் வாழக்கை......?

வசந்த கோகிலத்தின் குடும்பம் இர ண் டு மூன்று தலை முறைகளுக்கு முன்பிருந்தே இசையோடு இணைந்து வந்தது. அவளுடைய தகப்பனர் புகழ்பெற்ற மி ரு தங்க வித்துவான். தாயாரோ வீணைக் கச்சேரி நடத்துவதில் வல்லவர். இருவருக் கும் பிறந்த வசந்த கோகிலம் அவளது தொட்டில் பருவத்தி லிருந்தே சங்கீதத்தையும் ஒரு உணவாகக் கொண்டு வளர்ந் தாள். -

வசந்த கோகிலம் பள்ளிப் பருவத்திலேயே பெரி ச் சி க் கோயில் மீனட்சி சுந்தரம்பிள்ளையிடம் சங்கீதம் கற்றாள். அந்தக் காலத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிட்சைக்கு நல்ல மதிப்பு இருந்து வந்தது. எண்சுவடி சொல்லிக் கொடுக்கும் ஏட்டுப் பள்ளிக் கூடத்து வாத்தியார் போல அவர் கடுமையாக நடந்து கொள்வார். உடலுக்குத் தேகப்பயிற்சி எவ்வளவு அவசியமோ அதைப்போலவே இசைவாணர்களுக்கும் கு ர ல் ப யி ற் சி தேவை” என்று அவர் வாதாடுவார். எல்லோரும் இசைக்கலைஞர் களாக வந்துவிட முடியாது என்பது அவர் கருத்து. வேலை கிடைக்காதவன் ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட் பதைப் போல பொழுது போகாதவனெல்லாம் இசைத்துறை யில் இறங்கக்கூடாது; அப்படிப்பட்டவன் முன்னேறவும் முடி யாது. அவனால் இசையும் கெட்டுவிடும்-என்று அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்.

மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஒரு அலாதியான குணம் படைத்த வர் யார் அவரிடத்தில் சங்கீதம் பயில வந்தாலும் முதலில் அவர்களுக்கு இசையின்மீது இயற்கையிலேயே பற்று இருக் கிறதா என்று பரிசோதித்து விட்டுத்தான் சங்கீதம் கற்றுக் கொடுக்கத் தொடங்குவார். -

வசந்தகோகிலம் அவரிடம் சங்கீதம் பயிலச் சென்ற போது அவளுக்கு வயது பத்து இருக்கும். வர்ணம் பூசிய பளிங்குப் பொம்மையைப் போன்ற உருவம் உள்ள அவள் தன் குடும்பத் தின் இசையறிவை அப்படியே பிரதிபலித்தாள். தினசரி குரலைப் பக்குவம் செய்யாவிட்டால் வாத்தியார் தொடையில் கிள்ளு

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/13&oldid=698922" இலிருந்து மீள்விக்கப்பட்டது