பக்கம்:பாடகி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரே என்ற பயம் ஆறுமாத காலத்திற்குள் அவளுடைய ரத் தத்தில் ஊறிப்போய்விட்டது. காலையில் ஐந்துமணிக்கு எழுந்து விடுவாள். அவளுடைய தாயார் அவளேக் குளிப்பட்டி ஈரத்தலே யோடு கோகிலத்தைப் பயிற்சிக்கு அனுப்புவாள். தேக்கு மரத் தைப்போன்ற அவளுடைய மாநிற உடம்பிற்கும் அவள் நெற்றி யில் பூசியிருக்கும் திருநீறுக்கும் ஏதோ ஒரு சக்தி இருப்பது போல் மீனட்சிசுந்தரம் பிள்ளை நினைத்தார்.

“என்னுடைய பெயரைக் காப்பாற்றப் போகிறவள் கோகி லம்தான்” - என்று எத்தனையோ முறை மீனட்சி சுந்தரம் பிள்ளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார், இதல்ை மற்ற பிள்ளைகள் கோகிலத்தின் மீது பொருமைப் படத்தான் செய் தார்கள். பிறர் பொருமைப் படுவதற்கும் ஒரு தகுதி வேண்டு மல்லவா! அந்தத் தகுதியை நூற்றுக்கு நூறு கோகிலம் பெற்றி ருந்தாள். வசந்த கோகிலம் ஒவ்வொரு நாளும் அவள் குரலைச் சாதகம் செய்து கொள்ளுவதைப் பார்த்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையே திகைத்துப் போய்விடுவார். மாலையில் சொல்விக் கொடுத்ததை மறுநாள் காலையில் பாடிக்காட்டுவதும், காலையில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிக்காட்டும் கீர்த்தனையை மாஆல யில் அவள் பாடிக்காட்டுவதும் கோகிலம் தெய்வப்பிறவியோ என்று மற்றவரை நினைக்க வைத்தது. -

இப்படியே வசந்த கோகிலம் மீட்ைசிசுந்தரம் பிள்ளை தந்த இசைப் பயிற்சியில் வளர்ந்து அ ர ங் கே ற் ற மு. ம் கண்டாள். மைசூர் மன்னர் தலைமையில் அவள் கச்சேரி அரங்கேறியது. அவளை ஆளாக்கிய மீட்ைசி சுந்தரம் பிள்ளைக்கு வசந்த கோகி லத்தின் தந்தை ஆயிரம் வெண் பொற்காசுகளை வழங்கிஞர். ஆனல் அதிலெல்லாம் மீட்ைசி சுந்தரம் பிள்ளை திருப்திப்பட வில்லை. அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான ஆசை மறைந்து கிடந்தது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று அவர் நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

அரங்கேற்றம் முடிந்த அன்று இரவு மீட்ைசிசுந்தரம்பிள்ளை அவருடைய வீட்டு மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு விடிய விடியச் சிந்தித்தார். புதையல் இருப்பது கண்ணுக்குத்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/14&oldid=698933" இலிருந்து மீள்விக்கப்பட்டது