பக்கம்:பாடகி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிகிறது; ஆல்ை அதை எப்படி எடுப்பது என்று தான் எனக்குப் புலப்படவில்லை’ - என்று அவர் முணங்கிக் கொண் டிருந்தார்.

மீனட்சி சுந்தரம் பிள்ளைக்குக் கலிய மூர்த்தி ஒரே மகன். அவன் கோகிலத்தின் தந்தை தியாகராஜ பிள்ளையிடம் மிருதங் கம் பயின்று வந்தான். மீனுட்சிசுந்தரம் பிள்ளை, கலியமூர்த்திக்குக் கோகிலத்தை முடித்து வைத்துவிட வேண்டுமென்று துடி யாய்த் துடித்துக் கொண்டிருந்தார். தனக்கும் ஒரே பிள்ளே, தியாகராஜ பிள்ளைக்கும் கோகிலம் ஒரே பெண்தான். இருவருக் கும் திருமணம் நடந்துவிட்டால் இரண்டு பேரும் சிக்கல் இல் லாமல் இருப்பார்கள் என்று மீட்ைசி சுந்தரம் பிள்ளை நினைத் தார், ஆளுல் கோகிலத்தின் தந்தை தியாகராஜ பிள்ளை என்ன நினைத்தாரோ தெரியவில்லை முடிவான பதில் எதுவும் சொல் லாமல் காலத்தைக் கடத்திக் கொண்டே வந்தார்.

மீனுட்சி சுந்தரம் பிள்ளைக்குப் பொறுமையில்லை. சீக்கிர மாக ஒரு முடிவைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் நினைத்து நேராகத் தியாகராஜ பிள்ளை வீட்டிற்குச் சென்று கடைசி முறையாகக் கேட்டார். . . . . . .

தியாகராஜ பிள்ளை தயங்கவில்லை. மீனட்சிசுந்தரம் பிள்ளை யிடம் சொல்லுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த பதிலை அன்று அவர் படீரென்று சொல்லிவிட்டார். , என்னுடைய மகள் கோகிலம் அவளைவிடச் சிறந்த வாய்ப்பாட்டுக்காரனைத் தான் மணக்க விரும்புகிருள்’ என்று தியாகராஜ பிள்ளை சொன் னதும் மீட்ைசி சுந்தரம் பிள்ளை கொதித்துப்போனர்

“அப்படியா கோகிலமா அப்படிச் சொன்னுள்? சரி, கோகி லத்தின் முடிவுதான் உங்களுடைய முடிவா? - மீ ன ட் சி. சுந்தரம்பிள்ளை ஆழமாகப் பேசினர். .

‘வாழப்போகிறவள் அவள்தானே! இதில் நான் ஏன் குறுக் கிட வேண்டும்?’ - என்று அடக்கமாகப் பதில் சொன்னர். தியாகராஜபிள்ளை. -

‘நான் அதைக் கேட்கவில்லை. வாய்ப்பாட்டைவிட மிருதங் கம் மட்டமான தொழிலா? நீயோ ஒரு மிருதங்க வித்துவான்.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/15&oldid=698944" இலிருந்து மீள்விக்கப்பட்டது