பக்கம்:பாடகி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானே வாய்ப்பாட்டுக்காரன், உனக்கும் எனக்கும் என்ன வித் தியாசம்? உனக்குக் கையிலே இ ைச இருக்கிறது, எனக்கோ வாயிலே இசை இருக்கிறது. அதற்காக உன்னே விட நான் பெரி யவன் என்று பேசிவிட முடியுமா? - மீனட்சிசுந்தரம் பிள்ளை மிக்க விநயத்தோடு பேசினர். - -

இந்த நேரத்தில் மாடியிலிருந்து கோகிலம் ஏதோ ஒரு பா ட் ைட முணங்கிக் கொண்டே கீழே இறங்கி வந்தாள். திண்ணையில் அவளுடைய தந்தையும் அவளுடையவாத் தியாரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டாள். மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு உள்ளம் படபடத்தது அவர் நெஞ்சிலே எதையும் தேக்கி வைத்துப் பழக்கப்படாதவர்.

“என்னம்மா கோகிலம்? வாய்ப்பாட்டுக்காரனைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என்று சொன்னயாமே!’ என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை கேட்டுவிட்டார்.

அதற்காக கோகிலாவும் மடங்கிப்பேசவில்லை. அவரவர் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துத்தானே எதையும் முடிவு செய்ய வேண்டும். அதனுல்தான் அப்படிச் சொன்னேன் நான் புருஷனைவிட சம்பாதித்தால் அது குடும்பத்திற்கு நல்லதல்ல. அதற்காகத்தான் என்னைவிடச் சம்பாதிக்கும் ஒருவரைத் தேடு கிறேன். இந்த முடிவு என்னுடைய சங்கீதப் பயிற்சிக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படக்கூடாது என்பதனால் எடுத்த முடிவுதான். கலியமூர்த்தியை அவமானப்படுத்த வேண்டுமென் பதற்காக நான் சொல்லவில்லை’ - என்று கோகிலம் ஓர் ஆலா பனையே நடத்தி விட்டாள். * *

‘கோகிலா! நீ மறைத்துப் பேசுகிறாய் உன்னுடைய குரலுக்

குள்ள மகத்துவத்தை மனதிலே வைத்துக் கொண்டு நீ சிறு பிள்ளைத்தனமாகப் பேசுகிறாய். உன்னைவிட என் மகன் சம்பாதிக்கக்கூடியவன். இன்றைக்குத் தமிழ்நாட்டில் உன் தந்தை தியாகராஜ பிள்ளைக்கு அடுத்தபடியாகப் புகழ் பெற்றவன் கலியமூர்த்திதான். தொடக்கத்திலேயே உன் எண்ணம் இது தான் என்று சொல்லியிருந்தால் இத்தனை நாள் நான் காத்தி ருக்கவும் மாட்டேன். இவ்வளவு தூரம் மனச்சங்கடமும் ஏற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/16&oldid=698947" இலிருந்து மீள்விக்கப்பட்டது