பக்கம்:பாடகி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிருக்காது. கோகிலா ஒன்றை மட்டும் சொல்லி வைக்கி றேன். நீ எப்பொழுது மிருதங்கத்தைவிட வாய்ப்பாட்டே உயர்ந்தது என்று சொல்லிவிட்டாயோ அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன் உனக்கு உணர்த்துவதற்காகவாவது உன்னைப்போல் ஒரு பாடகியைத்தான் என் மகன் கலியமூர்த் திக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறேன். நான் யாரிடமும் சபதம் செய்வதில்லை. இன்று என்னுடைய சிஷ்யையிடத்தி லேயே நான் இந்தச் சபதத்தைச் செய்கிறேன்” - என்று சொல்லிவிட்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வேகமாக வீட்டைவிட்டு வெளியேறினர் மீனாட்சி சுந்தரம்

மீனட்சி சுந்தரம் பிள்ளை போன பிறகு கோகிலத்தை அவ ளது தந்தை தியாகராஜபிள்ளே மிகவும் கடிந்து கொண்டார்.

“என்ன இருந்தாலும் நீ என்னை வைத்துக் கொண்டு இப் படிப் பேசியிருக்கக் கூடாது மீட்ைசி சுந்தரம் ஒரு முரடன். கோபம் வந்து விட்டால் மாந்திரீகனைப் போல் கதறுவான், ஊரெல்லாம் பிரச்சாரம் செய்வான் - என்றார் தியாகராஜ Lorr. - .. . . . . -

“இது சாதாராண விஷயமில்லையே அப்பா. ஒ ளி த் து மறைத்துப் பேசக்கூடிய காரியமுமில்லை. நீ குற்றவாளியா இல்லையா என்று கேட்கிற இடத்தில் நான் யோசித்துச்சொல்லு கிறேன் என்று சொல்லமுடியுமா? அதுமாதிரித் தான் இதுவும். உங்களுக்கு விருப்பமானல் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனல் நான் சங்கீதத்தை விட்டுவிட வேண்டும்” - என்று பதில் சொன்னுள் கோகிலம் -

“சரி, நடந்தது நடந்துவிட்டது. இனிமேல்தான் நீபுருஷனை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் உன்னைப்போல் ஒரு பாடகியைத்தான் மருமக ளாக்கப் போகிறேன் என்று சபதம் செய்துவிட்டுப் போயிருக் கிருன் - என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னர் தியாகராஜ பிள்ளை. - ‘. .

பாடகிகள் அவருக்குக் கிடைக்கலாம். ஆனல் எனக்கு மேல் சிறந்த பாடகி யார் இருக்கிறார்கள்? * - -

I6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/17&oldid=698948" இலிருந்து மீள்விக்கப்பட்டது