பக்கம்:பாடகி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அப்படி நினைக்காதே! முத்துலெட்சுமி இருக்கிருள். அவள் தானே இப்போது தமிழ்நாட்டில் பெரிய கச்சேரிக்காரி. காசியி லிருந்து கன்னியாகுமரி வரை அவள் கச்சேரி நடக்கிறது.

‘முத்துலெட்சுமி எங்கே! கலியமூர்த்தி எங்கே! ராஜபோ கத்தோடிருக்கும் பெரும் பெரும் ஜமீந்தார்களேக்கூட அவள் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டாளே” -

‘ஒரு பெண்ணினுடைய வாழ்க்கையில் எதுவும் நடக்க லாம். எப்படியும் நடக்கலாம். அதை நாம் கணக்குப் போட்டு பார்க்க முடியாது’ - தியாகராஜபிள்ளை இப்படிச் சொன்னது கோகிலத்தின் ம ன த் தி ல் நெருஞ்சி முள் குத்துவதுபோல் இருந்தது.

அன்றிலிருந்தே கோகிலம் அவளுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கோட்டைகட்ட ஆரம்பித்தாள். தனக்கு வாய்க்க இருக்கும் புருஷன் சிறந்த சங்கீத வித்வானக வரவேண்டுமென அவள் ஆசைப்பட்டாள். இல்லாவிட்டாலும் தன்னுடைய சங் கீதத்திற்குப் பாதகம் உண்டாக்காத ஒரு இலட் சாதிபதி கிடைத்தாலும் போதும் என்று கருதினள். அவளுடைய குறிக் கோள், தனக்கு வரவிருக்கும் புருஷன் தன்னைவிட செல்வத்தில் உயர்ந்தவனுக இருக்க வேண்டும் என்பதுதான். - -

மனிதர்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு தங்களுக்குப்பிடித்த மான தத்துவங்களை ஊ ன் று கோல்களாகப் பிடித்துக் கொள் கிரு.ர்கள், குடும்பப்பெண்ணுக இருக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறவள் தனக்கு வாய்க்கும் புருஷனுக்குப் பணமில்லா விட் டாலும் பரவாயில்லை, குணமுள்ளவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிருள். உத்தியோகம் பார்க்கும் பெண் ேன தனது புருஷன் தன்னைவிட படித்திருக்க வேண்டும் எனக்கனவு காண்கிருள். அதைப் போல்தான் கோகிலத்தின் எண்ணமும் இசையோடு ஒட்டி ஓடியது. தமிழ்நாட்டில், இன்பமாக வாழ வேண்டும் என்று கருதுகிற எந்தப் பெண்ணும் கணவன் தன்னை விட உயர்ந்தே இருக்க வேண்டும் என்றுதான் கருதுகிருள். இதுதானே தமிழ்நாட்டுக்கு உள்ள தனிச்சிறப்பு!

பெரிச்சிக்கோயில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் மகன்

I7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/18&oldid=698949" இலிருந்து மீள்விக்கப்பட்டது