பக்கம்:பாடகி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியமூர்த்திக்குத் திருமணம் செய்து வைப்பதை ஒரு பலப் பரீட்சையாகவே கருதிவிட்டார். எங்கெங்கே சங்கீதம் படித்த வர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அலைந்து பார்த்தார். அவர் போன இடங்களிலெல்லாம், என்ன உங்கப் பையனுக்கா பெண் கிடைக்கவில்லை? ரதி மாதிரி இருப்பாளே உங்கள் சிஷ்யை வசந்தகோகிலம், அவளைவிடவா உங்களுக்குப் பெண் வேண்டும்’ என்று அவரது நண்பர்கள் சொன்னது மீட்ைசி சுந்தரம் பிள்ளைக்கு மேற்கொண்டு எரிச்சலை உ ண் டா க் கி விட்டது.

ரதியாம், மேனகையாம், நான் என்ன அழகான பெண் கிடைக்காமலா சுற்றிக்கொண்டிருக்கிறேன்! பைத்தியக்காரப் பிள்ளைகள்! எவளுடைய குரலில் லயமும் சுருதியும் இருக்கிற தோ, எவள் பாடினல் மேகமே கசிந்து பிதிர்ந்து உதிருமோ அவளையல்லவா நான் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று ‘மீனட்சி சுந்தரம் மனம் கொதிக்கத் தனக்குள்ளே பதில் சொல்லிக்கொண்டார். அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் அவரது நரம்புகளில் ரத்தத்திற்குப் பதிலாக வெறியும் கோப மும் பாய்ந்து கொண்டிருக்கும். -

மீட்ைசி சுந்தரம் ஆறுமாத காலம் தஞ்சாவூர் ஜில்லா முழுவதும் பெண் தேடி அலைந்தார். எந்த ஊரிலும் அவர் விருப் பப்படி பெண் கிடைக்கவில்லை. மெத்த வருத்தத்தோடு அவர் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ரயி லில் அவருக்குத் தூக்கமே வரவில்லை. எப்போது வி டி யு ம் என்று விழித்துக் கொண்டே இருந்த அவருக்கு மாயவரத்தைப் பார்த்ததும் மணி ஐ ந் தா கி விட்டது என்ற உற்சாகத்தில் ரயிலே விட்டு இறங்கி பிளாட்பாரத்தில் உலாத்தினர். அப்போது அவர் கண் களை ஒரு வர்ணச் சுவரொட்டி சுண்டி இழுத்தது. அது ஒரு சங் தேக்கச்சேரி விளம்பரச் சுவரொட்டி, அந்தச் சுவரொட்டியைப் பார்த்ததும் மீனட்சிசுந்தரம் பிள்ளையின் உள்ளத்தில் ஒரு மின் வெட்டுத் தெரித்தது.

‘ஏன் இந்த முத்துலெட்சுமி என்ன சாமான்யப்பட்ட வளா? இன்றைக்குச் சங்கீத உலகத்திலே இவளுக்கும் கோகிலா

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/19&oldid=698950" இலிருந்து மீள்விக்கப்பட்டது