பக்கம்:பாடகி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வுக்கும் தானே போட்டாப் போட்டி!’ - மீனாட்சி சுந்தரம் பெட்டியை எடுத்துக் கொண்டு மாயவரத்திலேயே இறங்கி விட்டார். .

கச்சேரி, அன்று மாலை ஐந்து மணிக்கு என்று போட்டிருந் தது. முத்துலெட்சுமி எங்கே தங்கியிருப்பாள்? ஒருவேளை முஜா பரி பங்களாவில் தங்கியிருந்தாலும் தங்கியிருப்பாள் -மீட்ைசி சுந்தரம்பிள்ளை ஒரு மாட்டு வண்டியை வாடகைக்குப்பிடித்துக் கொண்டு முஜாபரி பங்களாப் பக்கமாகப் போனர்.

அப்போதுதான் பொழுது புலர்ந்தது. ஹோட்டல்களில் ரேடியோப் பெட்டிகள் பாடத் தொடங்கின. மாயவரம்காபி பெயர் பெற்றதாயிற்றே! மீனாட்சிசுந்தரம் ஒரு கடையில் வண் டியை நிறுத்திவிட்டு காபி சாப்பிட இறங்கினர். வண்டியை விட்டு இறங்கி, இரண்டு அடிதான் அவர் எடுத்து வைத்திருப் பார்- அந்தக் கடை ரேடியோ ஒரு இனிய குரலில் பூபாள ராகத்தைப் பிழிந்து கொட்டத்தொடங்கியது. மணம் நிறைந்த மல்லிகைப் பூக்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை சொரிவது போல் இருந்தது அவருக்கு பூபாளத்தின் ஸ்வரங்கள் மீனாட்சி யைப் பனிப்பெட்டிக்குள் அடைத்து விட்டதுபோல் தெரிந்தது.

“எவ்வளவு அற்புதமான குரல் மதுவைவிட இசைக்குத் தான் போதை மிகுதி! இசை போதைக்கு மிஞ்சிய போதை எ து வுமே இல்லை’ என்று சொல்லிக் கொண்டே மீனட்சி சுந்தரம்பிள்ளை அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தார். -

‘அடே, மீனாட்சியா? எங்கே இருந்தப்பா, இப்படி வர்றே! வா, காபி சாப்பிடு’ என்று ஒரு குரல் ஹோட்டலின் உள்ளே யிருந்து வரவேற்றது மீனாட்சியை.

“நீயா, வடிவேலு! பத்து வருஷத்துக்கு முன்னலே ஒன்னே திருவையாத்திலே பாத்ததுதான்! அதுக்கப்புறம் இன்னிக்குத் தான் பார்க்கிறேன். எ ன் ன. இப்படி மாயவரம் பக்கம் வந் திருக்கே! - மீனாட்சி, அவரது பழைய நண்பரைப் பார்த்துக் கேட்டார். - . -

“இன்னக்கி நம்ப பாப்பா கச்சேரி இருக்கே! அதுதான் முத்துலெட்சுமி! அதுக்காகத் தொணைக்கு வந்தேன். இப்பக்

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/20&oldid=698951" இலிருந்து மீள்விக்கப்பட்டது