பக்கம்:பாடகி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட பாப்பாவுக்குக் கா ப் பி வாங்கத்தான் வந்திருக்கேன்’ என்றார் புதிய நண்பர் வடிவேலு.

‘ரொம்பச் சந்தோஷம், வடிவேலு ரேடியோவிலே கேட் டியா ஒரு குரலை மலர் மாரி பொழிவது போலில்லை?” என்று ஏக்கத்தோடு கேட்டார் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.

“ஆஹா, அது என்ன அமுதக் குரலாயிற்றே! வசந்த கோகி லத்தின் குரல் அப்படித்தானே இருக்கும்?’ என்றார் வடிவேலு. மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு மு. க ம் வியர்த்து விட்டது. வானெலியில் கேட்ட அந்தப்பாட்டு முத்துலெட்சுமி பாடிய தாகத்தானிருக்கும் என்று அவர் நினைத்தார்.

“என்ன அற்புதமான குரல்! ஒரு இடத்திலாவது பிசிறு தட்டவேண்டுமே! சொற்கள் பூத்தொடுத்தாற்போல் வந்து விழுகின்றன!’ - தனக்குள்ளே பிரமித்துக் கொண்டார்.

ஒடடல் சிப்பந்தி மேஜையில் காபி வைத்தது கூட அவருக் குத் தெரியவில்லை. :

“முத்துலெட்சுமியின் குரல் இதற்கு மேல் இனிமையாத இருக்கும் என்று சொல்லுகிறார்கள். எப்போதோ ஒரு முறை கேட்ட ஞாபகம். சங்கீதத்தையே தொழிலாகக் கொண்டவ னுக்கு எந்தக் குரல் நினைவிருக்கப் போகிறது? இன்றைக்குக் கேட்டு விட்டால் போகிறது -என்று பேசிக் கொண்டே வடி வேலுவை அழைத்துக் .ெ கா ண் டு மீனாட்சிசுந்தரம் பிள்ளை முஜாபரி பங்களாவிற்கு நடந்தார்.

முஜாபரி பங்களாவில் ஒரே தடபுடலாக இருந்தது. சங்கீதக் கூட்டத்திற்கே உரிய வெள்ளிக் கூஜா, வெள்ளி வெற்றிலைப் பெட்டி! எடுபிடியாட்கள், இங்குமங்கும் பரபரப்பாக ஒடிக் கொண்டிருந்தனர். முத்துலெட்சுமியைப் பார்ப்பதற்காக வெளி யூர்களிலிருந்து வந்த பல மிராசுதாரர்கள் காத்துக் கிடந்தார் சுள். அவர்கள் தங்க ள் வீட்டில் நடைபெறக் கூடிய விழாக் களுக்கு முத்து லெட்சுமியைப் புக் செய்ய வந்திருந்தார்கள். அவர்கள் வரிசையில் மீனட்சி சுந்தரமும் போய் உட்கார்ந்தார்.

மிராசுதாரர்கள் முனு. முணுத்துக் கொண்டேயிருந்தார்

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/21&oldid=698952" இலிருந்து மீள்விக்கப்பட்டது