பக்கம்:பாடகி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். கும்பகோணம் வெற்றிலைச் சீவல் காலியாகிக் கொண்டி ருந்தது. பாடகி முத்துலெட்சுமியாரையும் பேட்டிக்கு அழைத்த பாடில்லை. அம்மா தூங்குருங்க என்டான் ஒருவன். பத்து நிமிஷம் கழித்து இன்னொருவனைக் கேட்டால் அம்மா குளித்துவிட்டு சாதகம் செய்துகொண்டிருக்கிருங்க என்பான், இந்தப் பதில் காத்துக்கிடந்த மிராசுதாரர்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

‘ஏப்பா வெத்திலைப் பெட்டி! இந் த முஜாபரி பங்களா விலே அந்தப் பக்கம் ஏதாகிலும் பாதையிருக்கா?- எ ன் று கோபமாகக் கேட்டார் ஒரு மிராசுதார்.

என்னங்க அப்படிக் கேட்டுப்புட்டீங்க!’ - என்று கடிப் பதைப் போல் பதில் சொன்னன் எடுபிடி.

  • ‘இல்லே. நாங்க ரெண்டுமணி நேரமாகக் காத்துக் கிடக் கிருேம். முத்துலெட்சுமி அம்மா வேறெ பக்கம் கச்சேரிக்குப் போயிற போருங்களோன்னு கேட்டோம். நீ வேறெ ஒண்னும் தப்பா நெனேச்சுக்கிடாதே’-என்று அவனைச் சமாதானப்படுத் தினர் அடுத்த மிராசுதார்.

மீனுட்சிசுந்தரம் பிள்ளை சாகித்ய கர்த்தா அல்லவா - அவர் ஏதோ சாகித்யத்தை முணங்கிக் கொண்டேயிருந்தார். அவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துத் தாங்க முடியாமல் வெத்திலைப் பெட்டிக்காரனை ஒரு ஏவு ஏவினர்.

எஇந்தாப்பர் பெரிச்சிக்கோயில் மீட்ைசிசுந்தரம் பிள்ளை வந்திருக்கேன்னு ஒங்கம்மா காதிலே போடு'-என்று கடுப்பாக சொன்னர் மீனுட்சிசுந்தரம்.

பெரிய பெரிய மிராசுதார்களே காத்துக் கிடக்கிருங்க. அதுங்காட்டியும் உங்களுக்கென்னவாம்?’ - என்று வெத்திலைப் பெட்டி எகிறிக் குதித்தான்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை பெருமூச்சு விட்டார். கூட்டம் அப்போது அதிகமாகக் கூடிவிட்டது. புதிய புதிய பண்ணையார் களெல்லாம் வந்து கொண்டிருந்தார்கள்.

‘இன்னக்கு நமக்குப் பேட்டி கிடைக்காது’ என்று குறிச் சியை விட்டு எழுந்தார். அதற்குள்ளாக வெத்திலைப் பெட்டி

3 I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/22&oldid=698953" இலிருந்து மீள்விக்கப்பட்டது