பக்கம்:பாடகி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடோடி வந்து சேவிக்கிறேன், ஐயாட்டே தெரியாமெ மரியா தைக்குறைவா நடந்திட்டேன். அம்மா உங்களைக் கூட்டி வரச் சொன்னங்க!'- என்று பவ்யமாகச் சொல்லி, மீனட்சிசுந்தரம் பிள்ளையை அழைத்துப் போனன். வெளியே காத்திருந்த மிராசு தாரர்களுக்கு முகம் சிறுத்து விட்டது. அப்போதுதான் மீட்ைசி சுந்தரம்பிள்ளை ஒரு பெரிய ஆசாமியாக இருக்கும் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள்.

முத்துலெட்சுமி மீனுட்சிசுந்தரம் பிள்ளையை உரிய மரியா தையுடன் வரவேற்றாள். அவளுக்காக வைத்திருந்த பசும்பாலை வெள்ளிக்கிண்ணத்தில் ஊற்றி அவருக்கு கொடுத்தாள். முத்து லெட்சுமியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இசைமயமாகவே இருந்தது. புைரவி ராகத்தை சுவற்றிலே கோடு கிழிப்பதைப் போல முணங்கிக் கொண்டே இருந்தாள். -

மீனுட்சிசுந்தரம் பிள்ளைக்கு தான் வந்த விஷயத்தைப்பேசு வதற்குக் கூச்சமாக இருந்தது. முத்துலெட்சுமி எந்தக் கட்டத்தி லேயும் தன்னுடைய எதிர்காலம், குடும்பம், சொத்துப் பற்றுஎதைப் பற்றியும் பேச்சை எடுக்கவில்லை. ராகம், சாகித்யம், குர லில் இருக்கவேண்டிய நெளிவு சுளிவு இழைப்புகள் இவைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் மீனட்சி சுந்தரம் பிள்ளையிடத்தில் அவளுக்குத் தனி மரியாதை இருக் கிறது என்பதைக் காட்டிக் கொண்டாள். மீனாட்சிசுந்தரம் பிள்ளே சோபாவில் இருந்தபோது அவள் தரையிலிருந்தாள். அவர் எழுந்து வெற்றிலை எச்சிலைத் துப்பச் செல்லுகிறபோது அவள் எழுந்து நின்று கொள்வாள். அவளுடைய கழுத்திலே வயிர முத்துச்சரம் இருந்தாலும் நெஞ்சிலே காசு மாலை தொங்கி லுைம் அவள் உள்ளத்தில் அடக்கமும் மரியாதையும் இருந்தது. இவ்வளவு அழகும் செல்வமும் இனிய குரலும் புகழும் உள்ள இளம்பெண்ணை அடக்கி ஆள்வதற்குத் தன் மகனுக்கு ஆற்றல் உண்டா என்று மீனுட்சி சுந்தரம் பிள்ளைக்கு மனத்துக் குள்ளே ஒரு சந்தேகம் எழுந்தது. -

வசந்தகோகிலம் அவரிடத்திலே சங்கீதப் பயிற்சி பெற்ற தால் அன்று மீனட்சி சுந்தரம் பிள்ளைக்கு அந்த எ ன் ண ம் தோன்றவில்லை. முன்பின் பழக்கமில்லாமல் திடீரென்று முத்து

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/23&oldid=698954" இலிருந்து மீள்விக்கப்பட்டது