பக்கம்:பாடகி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெட்சுமியினுடைய தோற்றத்தையும் சுற்றுச் சார் பை யும் பார்த்தவுடன் மீனுட்சிசுந்தரம் பிள்ளைக்கு அந்த எண்ணம் தோன்றியது. -

“எங்கே இப்படிக் கிளம்பி வந்துவிட்டீர்கள்” முத்து லெட்சுமி பேச்சைத் தொடுத்தாள்.

‘'பட்டணத்துக்குப் போயிட்டு வர்றேன். மாயவரம் ஐங்ஷ னில் உன் கச்சேரி சுவரொட்டியைப் பார்த்தேன். கேட்டுவிட்டுப் போகலாம் என்று இறங்கிவிட்டேன்’ என்றார் மீனுட்சிசுந்தரம் பிள்ளை. -

“ரொம்பச் சந்தோஷம், இன்றைக்கு என் கச்சேரி இலக் கண வரம்பை மீருமல் நடக்கவேண்டும் இல்லையா? உங்களை வைத்துக் கொண்டு கோகிலம் எப்போதாவது கச்சேரி செய் திருக்கிருளோ?” * -

‘ஒ! நிறைய செய்திருக்கிருள். ஆனல் அவளிடம் சேஷ்டை கள் அதிகம். ஆனே பெண்ணுே பாடும்போதும் முகம் அழகாக இருக்கவேண்டும். அதுவே கச்சேரிக்கு ஒரு கலை முகக்கலை என்று எதற்காகச் சொல்லுகிறார்கள். அதற்காகத்தானே! யாரும் அழும்போது முகம் பயங்கரமாக இருக்கலாம். சினம் கொள்ளும் போது முகம் சிவப்பாக இருக்கலாம். பிற ைர மகிழ்வித்துத் தானும் மகிழும் போது முகத்தினுடைய அழகு ஏன் மாறவேண்டும் மனோரஞ்சிதம் வாசமுள்ள மலர்தான்; ஆனல் அதைச் சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்ளலாமே தவிர, சடையில் வைத்துக்கொள்ளமுடியுமா? அதுபோலத்தான் என்னதான் குரல் இனிமையாக இருந்தாலும் பாடுகின்றவர் களுடைய முகாபவமும் களேயாக இல்லையென்றால் அந்தக் கச் சேரியைத் துரத்தில் இருந்து ஒலிபெருக்கியில் கேட்கலாமே தவிர பந்தலில் உட்கார்ந்து பார்த்து ரசிக்க முடியாது.” மீட்ைசி சுந்தரம் பிள்ளையின் இந்தப் பேச்சு முத்துலெட்சுமியின் மனதை சுருக்கென்று தைத்தது. -

என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? கோகிலத்தின் இனிய குரலும் குளிர்ந்த முகமும் சங்கீத உலகத்தையே சுண்டி யிழுத்துக் கொண்டிக்கிறது என்கிறார்களே’ - முத்துலெட்சுமி தொடர்ந்து கேட்டாள்.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/24&oldid=698955" இலிருந்து மீள்விக்கப்பட்டது