பக்கம்:பாடகி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சிசுந்தரம் பிள்ளை லேசாகச் சிரித்து இந்தாம்மா முத்துலெட்சுமி சங்கீதம், கலே - இரண்டிலுைம் வரும் புகழ் காரணமில்லாமல் உயரும், காரணமில்லாமல் கவிழும். உயரும் போது அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. கவிழும்போது அதை யாரும் தூக்கிநிறுத்தி விடவும் முடியாது. உன்னைப் பற்றி யும் அப்படித்தான் வெளியே பேசிக் கெரள்கிறார்கள். உன்னு டைய பேச்சில் நான் பெருந்தன்மையைப் பார்க்கிறேன். அடக் கத்தைக் காண்கிறேன். ஆனல் நீ யாரையும் மதிப்பதில்லை என்று வெளியே சொல்லிக் கொள்ளுகிறார்கள். பெரும் புக ழுக்கு ஆளானவர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் இடையில் எப்படியோ ஒரு நெடுஞ்சுவர் வந்து விடுகிறது. உள்ளே நடப் பது ஜனங்களுக்குத் தெரிவதில்லை. ஜனங்கள் பேசுவது உள்ளே கேட்பதில்லை! - மீனுட்சிசுந்தரம் பிள்ளை வெற்றிலை போட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

முத்துலெட்சுமி பேசிக்கொண்டே , தம்புராவைத் தூக்கி வந்து தரையில் உட்கார்ந்தாள். தம்புரா சிவப்புப்பட்டுத் துணி யால் மூடப்பட்டிருந்தது. அந்தத் துணியை வலக்கரத்தால் எடுத்துவிட்டு மெல்லச் சுருதி சேர்த்தாள். சுருதி சரியாகச் சேர வில்லை துவக்கத்திலேயே அது பஞ்சமத்திற்குச் சென்றுவிட்டது. காலில் நெருப்புப் பட்டவரைப் போல மீனுட்சிசுந்தரம் பிள்ளை முகத்தைச் சுளித்தார். ‘நிறுத்தும்மா! உனக்கு மனம் சரியில்லா விட்டால் விரல்களின் ஒத்துழைப்புக் கிடைக்காது. எப்போது எடுத்த எடுப்பிலேயே பஞ்சமத்திற்குப் போய் விட்டதோ அதற்குப் பிறகு ஆயுதத்தை வைத்துவிட வேண்டி யதுதான்”. மீனட்சிசுந்தரம் பிள்ளை இசைத்துறையில் தனக் குள்ள பாண்டித்தியத்தை வெளிக் காட்டினர். .

‘நீங்க சொல்வது உண்மைதான். கோகிலத்தைப் பற்றி பேச்சு எடுத்ததும் என் மனத்திலே ஒரு குழப்பம், ஒர் அதிர்ச்சி அந்தப் பரபரப்பிலே தான் நான் தம்புராவை எடுத்தேன்’என்று சொல்லிவிட்டு தம்புராவை மறுபடியும் இருந்த இடத்தி லேயே வைத்துவிட்டாள் முத்துலெட்சுமி.

“யார் எந்தத்துறையில் வல்லுநராக இருக்கிறார்களோ அவர் அந்தத் துறையில் ஆருடராகக் கூட ஆகலாம். அந்த

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/25&oldid=698956" இலிருந்து மீள்விக்கப்பட்டது