பக்கம்:பாடகி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூடம் பலிக்கவில்லையென்றால் அந்தத்துறையில் அவர்கள் சரியாகப் பயிற்சி பெறவில்லை என்பதுதான் அர்த்தம்.”

‘சங்கீதத்திலும் ஆரூடம் உண்டோ? - முத்துலெட்சுமி ஒரு அடிப்படைக் கேள்வியைப் போட்டாள். ‘ஆரூடம் என்பது என்ன? அது ஒரு வகையான கணக்கு. அந்தக் கணக்கு இசைக் கும் உண்டு. மொழிக்கு உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் இருப்பதைப்போல இசைக்கு ஏழு ஸ்வரங்கள் இருக்கின்றன. கோபம், தாபம், காதல், ஆவேசம், வெறுப்பு, கருணை, வைராக்கி யம் - இவைகளைக் கூட அந்த ஏழு ஸ்வரங்களுக்கு இணையாகச் சொல்லலாம். உலகத்தில் உள்ள இந்த ஏழு நிலைகளை ஒன்றாக இணைத்துக் கட்டிப்பிடித்து திருகிக்கொண்டு ஒடுவது இசையின் ஸ்வரங்கள்தாம்.’

-மீனுட்சிசுந்தரம் பிள்ளை இசையின் தத்துவத்தை விளக்க ஆரம்பித்தார். -

முத்துலெட்சுமிக்கு இசையிலே லயிப்பு இருந்ததால் இந்த விளக்கம் அவளுக்குச் சுவையாக இருந்தது. அவள் அடுத்த் கேள்வியைக் கேட்டாள். -

“நீங்கள் ஏழு ஸ்வரங்கள் என்று சாதாரணமாகச் சொல்லி விட்டீர்கள். அதைப் பயிலுவதற்கு எவ்வளவு ஆண்டுகள் கஷ் டப்பட வேண்டியிருக்கிறது? காலேயில் ஐந்து மணிக்கு எழுந் திருக்க வேண்டும். குரலைச் சாதகம் செய்ய வேண்டும். அதைப் போல் மாலையிலேயும் செய்யவேண்டும். சாகித்யத்தை மனப் பாடம் செய்யவேண்டும். இப்படி எத்தனை ஆண்டுகள் கஷ்டப் பட்டு இந்த ஏழிசையைக் கற்கவேண்டியிருக்கிறது!” - என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டே பதில் சொன் ைஸ் முத்து லெட்சுமி. - -

‘ஏழு ஸ்வரங்களும் சாமான்யப்பட்டவையா? ஏழும் வைரங் கள். அதுவும் காலங்களே வெல்லும் வைரங்கள். உண்மையி லேயே இசையின்மீது மானசீகமாகப் பற்றுக் கொண்டவர் களுக்குத்தான் இந்த ஏழு ஸ்வரங்களும் பயிற்சிக்கு வரும். யோக சாதனைக்கு இவ்வளவு கடினம் இல்லை. காட்டிலே தவம் செய்வதுகூட இதைவிடச் சுலபம்தான்’ - மீனுட்சிசுந்தரம்

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/26&oldid=698957" இலிருந்து மீள்விக்கப்பட்டது