பக்கம்:பாடகி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது வெத்திலைப் பெட்டி உள்ளே ஓடிவந்து வெளியில் கூட்டம் கூடிவிட்டது. சங்கீத சபைக்காரர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்’ என்ற தக வலைக் கொடுத்தான்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு, வந்த விஷயத்தைப் பேச முடியவில்லையே என்று தர்மசங்கடமாக இருந்தது. இருந்தா லும் கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்டு வைப்போம் என்று நினைத்து உனக்கு என்ன வயதாகிறது? உன் எதிர்காலத்தைப் பற்றி என்ன முடிவு செய்து வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டு வைத்தார்.

என் வயதைப் பற்றிக் கவலைப்படவேண்டிய நினைப்புக்கள் அழிந்து போய்விட்டன. நான் ஸ்வரங்களிலேயே என்னைமறந்து விட விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை சங்கீதம் என்ற தண்டவாளத்திலேயே ஒடட்டும் என்று விட்டுவிட்டேன். ஒரு பெண் சங்கீதத்திலேயே அதிகமாக ஈடுபாடு கொண்டு விட் ட்ால் அவள் யாருக்கும் பணிந்து போக விரும்பமாட்டாள். சங்கீதமும் ஒருவிதமான செருக்குத்தான். நீங்களே சொல்லுங் கள், எனக்கு நிறைய பணம் இருக்கிறது. நிறைய புகழ் இருக் கிறது, நான் யாரையாவது மணந்துகொள்ள வேண்டுமென்றால் எல்லாவற்றிலும் என்னேவிடச் சிறந்தவரை மணக்கவேண்டும். சங்கிதத்தில் சிறந்தவர்களுக்கு என்னுடைய தாத்தா வயதாக இருக்கிறது; ஒன்று நான் வாழ்க்கையைத் துறக்கவேண்டும், இல்லாவிட்டால் என்னுடைய புகழையும் இசையையும் துறக்க வேண்டும். இதில் எது சிறந்தது? நீங்களே சொல்லுங்கள் - என்று ஒரு முடிச்சைப் போட்டுவிட்டாள்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஏதோ யோ சிப்பது போல் அண்ணுந்து பார்த்தார்.


இசைவாணி வசந்த கோகிலத்தின் வாழ்க்கையில் குறுக்

கிட்ட அவளது திருமணப் பிரச்சினேதான் அவளை சங்கீதம் சர.

வணபவாவிடம் கொண்டுவந்து சேர்த்துவிட்டது.

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/27&oldid=698958" இலிருந்து மீள்விக்கப்பட்டது