பக்கம்:பாடகி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனினும் இனிய அவளுடைய குரலில் தென்றலில் மிதக் கும் மலர்போல சரவணபவா லயித்துக் கிடந்தான். அவள் அவ னுக்கு மனைவிதான் என்றாலும் யாருக்கும் இல்லாத தெய்வீக சக்தி அவளுக்கு இருப்பதாகக் கருதினன். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளுடைய குரலிலே குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவன் அக்கறை காட்டினன். தினசரி வசந்த கோகிலம் குரல் சாதகம் செய்யும்போதெல்லாம் அருகிலே யிருந்து தலையாட்டிக் கொண்டிருப்பான். கோகிலம் யாரையா வது பணியாட்களைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் கூட சர வணபவா கையை நெறித்துக் கொள்வான். கோகிலத்திற்குத் தொண்டை கட்டிவிடுமோ என்ற கவலை அவனுக்கு.

சரவணபவா தன்மீது வைத்திருக்கும் பரிவைக் கோகிலம் உணர்ந்தாள். தன் குரலில் அவன் மயங்கிக் கிடக்கும் நிலையை யும் அவள் புரிந்திருந்தாள். ஆனல் அவளுடைய உள்ளத்தில் ஒரு கீறல் விழுந்திருந்தது. அது புண்ணுகி விடுமோ என்ற அச்சம் ஒருபுறம் அவளே உறுத்திக் கொண்டிருந்தது.

‘வாழ்க்கை என்பது வெறும் சுகபோகம்தாளு? அப்படித் தான் என்றால் ராஜகுமாரிகளுக்குப் பிரச்னைகளே இல்லையா? பல ராஜ்யங்கள் காதலால் அழிந்திருக்கின்றன என்பது வெறும் கட்டுக் கதையா? - என்று அவள் ம ன ச் சா ட் சி அவளே உலுக்கியெடுத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடல் நலிவுற்றது. குரலைத் தினசரி சாதகம் செய்து கொண்டிருந்தவள் வாரம் ஒரு முறை செய்தால் போதும் என்று நினைத்து விட்டாள்.

‘கோ கி லா! வர வர நீ சங்கீதத்தையே மறந்துவிட் L-?”

‘சங்கீதத்தை என்னல் மறக்க முடியுமா? பா டு வ ைத க் குறைத்து விட்டேன்.” &

‘நீ எப்போது பாடுவதைக் குறைத்துக் கொண்டாயோ அப்போதிருந்து எனக்கும் சோர்வு தட்ட ஆரம்பித்து விட் டது.” -

‘அது எனக்குப் புரிகிறது; ஆனால் உங்களுக்கு ஒன்று புரிந் திருக்கிறதோ?”

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/28&oldid=698959" இலிருந்து மீள்விக்கப்பட்டது