பக்கம்:பாடகி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோதிலா??

“மாம்பழத்தைக் கடித்துச் சாப்பிட்டால் சாப்பிடுபவர் களுக்கு மட்டுமே இன்பம். மாம்பழத்திற்கு இன்பமில்லை. இது உங்களுக்குத் தெரியாததா?”

“என்ன கோகிலா, புதிய பல்லவியை ஆரம்பித்திருக் கிறாய்?”

‘பல்லவியை மாற்றுவது பெண்கள் பழக்கமல்ல. பெண் களின் வாழ்க்கை ராகம் போன்றது. ஒரு முறை அமைந்து விட்டால் அதை யாரும் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது. கல்யாணி ராகம் கல்யாணியாகத்தான் இருக்கும்; சங்கரா பரணம் என்றைக்கும் சங்கராபரணமாகத்தானிருக்கும். ஆனல் ஆண்கள் வாழ்க்கைதான் பல்லவியாய்விட்டது. ராகத்திற்கு ஏற்றபடி பல்லவியை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்கோகிலத்தின் கண்களில் கண்ணிர் முட்டி மோதிக்கொண்டு வந்தது. -

கோகிலா நான் உன்னை மணந்தது உன் அழகிற்காக அல்ல. உன்னுடைய புகழுக்காக அல்ல. உன்னுடைய குரலுக் காகத்தான் உன்னை மணந்தேன்!’ - சரவணபவா கடுப்பாகப் பேசினன். -

‘நீங்கள் என்னுடைய குரலைத்தான் மணந்தீர்கள் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. நீங்கள் விரும்பிய அந்த இனிய குரல் என்னை விட்டுப் போய்விட்டால்...’

- கோகிலம் ஆவலோடு கேட்டாள். ‘இதற்குப் பதில் உனக்கே தெரிந்திருக்கவேண்டுமே!’

“எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனல் உங்களுக்கு இன்னும் உண்மை தெரியவில்லையே என்பது ஆச்சரியமே.”

‘விளங்கச்சொல், நீ பாடப்போவதில்லை என்கிருயா?”

இல்லை, நான் பாடப்போவதில்லையென்றால் அது நாளுக எடுத்த முடிவாகத்தானிருக்கும். ஆனல் என்னல் இப்போது பாடவே முடியாதே’ - என்று தேம்பிக் கொண்டே கதறினள் கோகிலா. -

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/29&oldid=698960" இலிருந்து மீள்விக்கப்பட்டது