பக்கம்:பாடகி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ேகோஇலா!’ *ஆம். என்னுடைய குரல் எப்போதோ கெட்டு விட்டது. நான் பழைய கோகிலமில்லை. இப்போது என்னல் இனி எந்த ராகமும் பாடமுடியாது. அழுகின்ற முகாரியைக் கூட முறை யாகப் பாடமுடியாது. டின் குரலை மணந்ததாகச் சொன்னிர் களே! இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?

சரவணபவா இதற்குப் பதில் சொல்லவில்லை. அவனுடைய கவனம் எங்கோ ஒரு பக்கம் திரும்பியிருந்தது. அடுத்த தெருவி லிருந்த திருமண வீட்டிலிருந்து ஒலித்த இசைத் தட்டு அவன் மனதைக் குழப்பியது.

‘ஆஹா ஸ்ரீரஞ்சனி! இந்த அமுதக்குரலை இவ்வளவு நாட் களாக நான் கேட்டதேயில்லே கோகிலா! உன் ைல் இந்த ராகத்தை இப்போது பாட முடியுமா?” -

- அவளிடமிருந்து எதுவும் பதில் கிடைக்கவில்லை. சரவணபவா அவள் பக்கம் திரும்பினன். அவள் மயங்கிக் கிடந்தாள்.

கோகிலத்தை படுக்கையில் கிடத்திர்ைகள் அவள் முகம் ஈரம் காணுத பூச்செடியைப் போல, இரத்த ஒட்டமில்லாமல் இருந்தது.

‘காபி கொண்டுவரச் சொல்லட்டுமா?” - சரவணபவாவின் கேள்வியில் பரிவில்லை. மருத்துவரின் பேச்சாகவே இருந்தது.

கோகிலத்தின் உள்ளம் மிரண்டிருக்கிறது எ ன் ப ைத அவளது விழிகள் வெளிப்படுத்தின. உருட்டி உருட்டி விழித் தாள். சரவணபவா முன்பு அவள் மீது காட்டிய பாசத்தின் இன்ப நினைவுகள் அவளைப் பிசைந்து கொண்டிருந்தன.

கோகிலா, நீ எப்போதும் ஏழு ஸ்வரங்கள் உள்ள ராகத் தையேதான் பாடவேண்டும். அதில்தான் சம்பூர்ணம் இருக்’ கிறது.’ - -

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்! பூரணமில்லாத ராகம்

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/30&oldid=698962" இலிருந்து மீள்விக்கப்பட்டது