பக்கம்:பாடகி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட இனிமையாக இருக்குமே?

‘இருக்கலாம் கோகிலா, ஆல்ை அதன் இனிமை குறுகிய தாகத்தானிருக்கும் சம்பூர்ணம் என்பது எவ்வளவு இனிமை யான மங்கலமான வார்த்தை தெரியுமா?

‘ராகத்தில் மங்களம், அமங்கலம் என்று இல்லை. எல்லாமே இசைதா னே P: -

‘உண்மைதான்! எல்லோர் குரலும் அப்படியா இருக்கிறது. நீ பாடினல், ஏழு ஸ்வரங்களும் கேட்பவர்களுக்கு ஏழு மந்திரங் களாகவே ஒலிக்கின்றது!’

‘ரொம்பவும் புகழுகிறீர்கள் நீங்கள்!” வேறு யாரையும் கேட்டுப்பாரேன். உ ன் னு ைட ய குளிர்ந்த குரலின் கோமளமான வேலைப்பாடுகள் சங்கீத வித் வான்களையே மதிமயங்கச் செய்து விடுகின்றன. சுருதியுடன் இணைந்து நீ பாடும்போது உன்னை அறியாமலே நீ தேவதையாகி விடுகிறாய்.”

-இப்படிப் புகழ்ந்து அவளுடைய காலடியிலேயே கிடந்த சரவணபவா இப்போது தள்ளியிருந்து முகத்தைச்சுளித்துக் கொண்டு பேசுவது அவள் நெஞ்சில் நெருப்பு வைப்பது போலி ருந்தது.

வீட்டில் ஒரே அமைதி. எந்த இசை ஓசையும் இல்லை. ஆங்காங்கே எப்போதாவது பல்லிச் சத்தம், அவ்வளவுதான். ஆம்! சரவணபவா குற்றாலத்திற்குப் போய்விட்டான். சீசன் முடிந்துதான் திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

வசந்த கோகிலம் இப்போது அந்த மாளிகையில் இல்லை. அவள் அவளுடைய சொந்தக் கிராமத்திற்குப் போய் விட்டாள். அவளுக்கும் அவளுடைய குரலுக்கும் உள்ள உறவு அறுந்தது போல் சரவணபவாவிற்கும் கோகிலத்திற்கும் உள்ள மையல் தீர்ந்துவிட்டது.

கோகிலத்தின் ஊர் சிறிய ஊர். ஒரு பெருமாள் கோயில் அதை சுற்றி நான்கு வீதிகள். கோயிலுக்கு எதிரே தாமரைத்

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/31&oldid=698963" இலிருந்து மீள்விக்கப்பட்டது