பக்கம்:பாடகி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடாகம். இதுதான் அந்தக் கிராமம்.

கோகிலத்தின் வீடு புராதனமானது. கோயில் கோபுரத்தில் குடியிருக்கும் புருக்கள் அடிக்கடி பறந்து வந்து கோகிலத்தின் வீட்டு மொட்டை மாடியில் அமரும். கிராமத்திற்குத் திரும்பிய புதிதில் அவள் அடிக்கடி புருக்கூட்டத்தைப் பார்த்து மகிழ்வது உண்டு. சிலநாள் கழித்து அப்பழக்கத்தை விட்டுவிட்டாள். புருக்கள் ஒன்றையொன்று மையல் கொண்டு மருவி விளையாடி யது அவள் மனதைத் துன்புறுத்திக் கொண்டேயிருந்தது. அத ல்ை அவளுடைய உடல் நலம் மேலும் பாதித்தது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது எந்தக் காட்சி மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்கிறதோ அதே காட்சி மனம் துன்புற்றிருக்கும் போது மேலும் மனத்தைத் துன்புறுத்துகிறது.

வசந்த கோகிலம் இப்போது இருமிக் கொண்டிருக்கிருள். அடிக்கடி இருமிக் கொண்டிருக்கிருள். அவள் இருமும் போதெல் லாம் எ ச் சிலை விழுங்கிக் கொண்டேயிருக்கிருள். அவளுக்கு உரிமையோடு உதவி செய்ய அருகில் ஆள் இல்லை. அவளது தந்தை நடை உடை இல்லாமல் தளர்ச்சியுற்றிருந்தார். தாயில்லை. அவள் தகப்பனர் வாசித்த மிருதங்கம் உறைபோட்டு மு. க ட் டி ல் கட்டித் தொங்கவிடப்பட்டுக் கிடந்தது. பழைய காலத்துப் புகைப்படங்கள் சுவரில் தொங்கிய வண்ணம் ஆடிக் கொண்டு கிடந்தன. ஆடிமாதத்து மரங்களைப்போல இலை யுதிர்ந்து, கோகிலத்தின் குடும்பம் வெறிச்சோடிக் கிடந்தது. அவளுடைய குரலுக்கு மெருகு .ெ கா டு த் து, அவளுடைய புகழுக்குச் சிகரம் வைத்த அவளுடைய தம்பூரா துருப் பிடித்த துப்பாக்கியைப் போல மூலையில் சாய்ந்து கிடந்தது. -

உடைந்த சிலேயைப் போல அவளது குரல் கெட்டு விட் டது. ராகங்கள் அவளுக்கு மனப்பாடமாக இருந்தாலும் குரல் அவளுக்கு ஒத்துழைக்க அறவே மறுத்து விட்டது. கையிழந்த ஒவியனைப் போல அவள் நிலைமை மோசமாகிவிட்டது. அவள் பாடக் கேட்டு ஆனந்தக் கண்ணிர் வடித்த உலகம் அவளே புலம் பிக் கண்ணிர் வடிக்க வைத்து வேடிக்கை பார்த்தது. சிலரது புகழ், வாழ்க்கையை அழித்து விடுகிறது. சிலரது வாழ்க்கை

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/32&oldid=698964" இலிருந்து மீள்விக்கப்பட்டது