பக்கம்:பாடகி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருக்குக் சிடைக்க வேண்டிய புகழை அழித்து விடுகிறது. பாவம், கோகிலா எலுமிச்சம் பழத்தைப்போல ஒளிமயமாக இருந்த அவள் உடல், காய்ந்து மர்மரத்துப் போய் விட்டது. பழைய நிறத்தை இழந்து விட்டாள் கண்கள் கிடங்கு விழுந்து போய்விட்டன. தனக்குள்ளே பாடிக்கூடத் தன்னைத் திருப்தி படுத்திக் கொள்ள அவளால் முடியவில்லை. போர்க்களத்தில் தளபதி ஒருவன் வீழ்ந்து விட்டால் படைகள் அனைத்தும் வாப சாகி விடுவதைப் போல ஒரு மனிதனுடைய வாழ்க்கை, அவ னுடைய பிரதானமான குணம் கெட்டு விட்டால், உடனே அவனை நோய் நொடிகளின் துன்பமே பற்றிக் கொள்கின்றன.

கோகிலத்தின் கதையும் அப்படித்தான்.

கோகிலத்தின் தலையில் இன்னொரு பேரிடி விழுந்திருந்தது. அதை அவள் உணரவில்லை. கிராமத்திற்கு வந்த பிறகு தான் அது அவளுக்குத் தெரிந்தது. தன்னுடைய குருவின் மகன் பாடகி முத்துலெட்சுமியைத் திருமணம் செய்து கொண்டு விட் டான் என்ற தகவல் அவளுக்குப் பிற்பாடுதான் தெரிந்தது. அந்தச் செய்தியை அவள் கேள்விப்பட்டதும் அவளால் மூச்சு விட முடியவில்லை. அந்த திருமணத்தைக் கோகிலம் அவளுடைய வாழ்க்கையில் இரண்டாவது தோல்வியாகக் கருதினுள். ஏற் கெனவே குடி படையிழந்து தவித்த மன்னன், அடுத்து மனைவி மக்களையும் இழந்து தவித்ததைப் போலக் கோகிலம் தேம்பித் தேம்பி அழுதாள். ஆணவம் என்பது எந்த ரூபத்திலும் மனிதனே அழித்து விடுகிறது. எந்த இசை அவளைத் தலைநிமிர்ந்து பேச வைத்ததோ அதே இசைதான் அவளை தலைநிமிராமற் செய்தது. படிக்காதவர்களிடத்திலே பண ரூபத்தில் ஆணவம் இருக்கிறது. படித்தவர்களிடத்திலே பதவி, பட்டம் ரூபத்திலே ஆணவம் இருக்கிறது. பெண்ணிடத்திலே அழகு ரூபத்திலே ஆணவம் அவளே ஆட்டிவைக்கிறது. ஆனல் கோகிலத்திடம் பணம். அழகு, இசை இந்த மூன்று ரூபத்திலேயும் ஆணவம் அவள் கண் களேயே மறைத்திருந்தன. ஆணவம் யாரையும் வாழ வைத்த தில்லை. ஆணவம் யாரையும்.அழிக்கத் தவறியதுமில்லை அதுவும், சின்ன வயதில் குடிபுகும் ஆணவம் கருநாகம் தீண்டியது மாதிரி; அதற்கு மருந்தும் கிடையாது; மந்திரவாதியும் இல்லை.

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/33&oldid=698965" இலிருந்து மீள்விக்கப்பட்டது