பக்கம்:பாடகி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலா! மைேரஞ்சித மலரைப் பறிக்கச்சென்று பூ நாகத் திடம் கொட்டுபட்டவளைப்போல் தினம்தினம் செத்துக் கொண் டிருந்தாள். அவளது வைர நகைகள் வட்டிக் கடைகளில் சரண் புகுந்தன. அவளது பட்டுப் புடவைகள் மார்வாடியிடம் மறு விலைக்குப் போய்விட்டன. என்றும் போல் அன்றும் அழியாம லிருந்தது அவளுடைய நீண்ட கூந்தல் ஒன்று தான். இருமல் ச த் த ம் தவிர வேறு சத்தம் அவள் தொண்டையிலிருந்து கிளம்பவேயில்லை.

“என்னுடைய சிஷ்யை வசந்த கோகிலம் ஒரு காலத்தில் சாகித்யகர்த்தாவாக வருவாள்’ - என்று ஆசிரியர் மீனட்சி சுந்தரம் பிள்ளையினுடைய வாழ்த்து அறவே அழிந்து அதுவே அவளுக்கு ஒரு சாபமாக வந்து விடும் என்று வசந்த கோகிலம் கனவிலும் கருதவில்லை.

‘கோ கி லா!'- வெளித்திண்ணையில் படுத்திருந்தபடி உள்ளேயிருந்த கோகிலத்தை அழைத்தார் அவள் தந்தை.

பதில் பேசச் சக்தியற்ற வசந்த கோகிலம் பொம்மையைப் போல நடந்து வந்து அவர் அருகில் நின்றாள்.

‘வைத்தியர் இப்ப வந்து விடுவாரே!” ‘ ைவ த் தி ய ர் வந்து என்ன பயனப்பா? அவர் வந்தால் மருந்து வாங்னும். மருந்து வாங்கப் பணம் வேணும். எல்லாம் முடிந்து விட்டது.” கோகிலத்தின் பதில், அவள் தந்தையின் நெஞ்சில் இரும் பைக் காய்ச்சி ஊற்றுவது போலிருந்தது. “உதவி கோரி வந்த பெண்களுக்கெல்லாம் பட்டுப் புடவைகளைத் தானம் செய்த வளின் நிலை இப்படி ஆகிவிட்டதே’ என்று அவர் மன மொடிந்து போனர்.

‘ஏம்மா இப்படியெல்லாம் பேசுகிறாய். உயர்ந்த பக்திக் கீர்த்தனைகளைப் பாடிய உன் வாயில் கெட்ட வார்த்தைகள் வர லாமா? இதெல்லாம் ஒரு சோதனை என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!” என்று அவர் தேறுதல் சொன்னர்.

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/34&oldid=698966" இலிருந்து மீள்விக்கப்பட்டது