பக்கம்:பாடகி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலம் பதில் ஏதும் பேசவில்லை. அவளே எதுவும் பேச விடாமல் இருமல் தடுத்துக் கொண்டிருந்தது. உடல் சக்தியற்றி ருந்ததால் அவளது கண்கள் வறண்ட கிணற்றைப் போல் உலர்ந்திருந்தன.

“ஏ ம் மா, நீ எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கிறாய்; கையில் பணத்தை வைத்துக் கொண்டு நீ மறைத்ததே கிடை யாது; ஆனல் உனக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கும் போது ஒருத்தர் கூட வரவில்லையே அம்மா!’

‘அதுவா! நாம் இந்த நிலையிலே இருக்கிருேம் என்று அவர் களுக்கு எப்படியப்பா தெரியும். கோகிலம் கோடிக்கணக்காகச் சேர்த்து வைத்திருப்பாள் என்று தான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்”. கோகிலத்தின் பதில் இருட்டறைக் குள்ளிருந்து பேசுவது போலிருந்தது.

“அப்போதே நான் நினைத்துக்கொண்டேன்; கோகிலா இப்படி அள்ளிக் கொடுக்கிருளே! வருங்காலத்தை நினைத்துப் பார்த்தாளா என்று அப்போதே என் மனம் பதைத்தது! தனக்கு மிஞ்சித்தானே அம்மா தானம் தர்மம் எல்லாம்!”

“உங்களுக்கு அந்தப் பழமொழி மீது நம்பிக்கை! எனக்கு தர்மம் தலைகாக்கும் என்ற பழமொழி மீது நம்பிக்கை! என்ன செய்வது உங்கள் பழமொழிதான் இப்போதைக்கு வெற்றி பெற்றிருக்கிறது’.

தலையில் நேர் வகிடு எடுத்து கூந்தலை இரண்டாகப் பிரிப் பது போல் முடியலங்காரம் செய்து கொள்ளும் கோகிலா சில நாட்களாகத் தலை பின்னுவதையே நிறுத்தி விட்டாள். பூச் சூடிக் கொள்வதுமில்லை. தினந்தோறும் மனங்குளிரும் ஜவ்வாது பொ ட் டு வைத்துப் பழகிய அவள் நெற்றி மஞ்சள் பூத்துப் போயிருந்தது. தேய்த்து விளக்கி வைத்த வெண்கலப் பாத்திரம் போன்ற அவளது மேனி களிம்பேறிய பாத்திரம் போல கருத் துப்போய் விட்டது. எந்தக் கட்டத்திலும் பிசிறு தட்டாமல் உச்ச ஸ்தாயியில் ரீங்காரம் செய்து கொண்டிருந்த அவளது இனிய குரல் இப்போது அடுத்தவர்களிடம் உரக்கப் பேசக்கூட முடியாத நிலையை அடைந்துவிட்டது. சங்கீத உலகத்தையே

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/35&oldid=698967" இலிருந்து மீள்விக்கப்பட்டது