பக்கம்:பாடகி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி ழு ங் கி ஏப்பம் விடவேண்டுமென்று ஆசைப்பட்ட அவளே அந்தச் சங்கீதமே உருக் குலைத்து விட்டது.

‘உயிரோவியம்போல இருக்கிருயே’ என்று வர்ணித்தவர் கள் அவளைக் கண்டால் இப்படி எலும்புக் கூடாகி விட்டாயே’ என்று கண் கலங்குமளவிற்கு மாறிவிட்டாள். கோகிலா அவ ளுடைய எதிர்காலத்தில் நம்பிக்கையிழந்து விட்டாள். மீண்டும் நலம் பெற்று, ரசிகர்களைச் சந்திப்போம் என்ற நப்பாசை அவ ளுக்கு இல்லாமல் போய்விட்டது. அவளுடைய உள்ளத்திலே ஒரு தத்துவப் போராட்டம் கிளம்பியது. ஒரு பெண் தன்னை விட செல்வத்தில் சிறந்தவரை மணந்துகொண்டால் சுகம் பெறு வாளா - அல்லது தன்னைப்போல் சம நி லே யி ல் உள்ளவரை மணந்து கொண்டால் சுகம் அடைவாளா, அல்லது தன்னிலும் கீழான நிலையில் உள்ளவரை மணந்து கொண்டால் சுகம் பெறு வாளா - இதுதான் அவளது மனப் போராட்டம். இதற்கு விடை காண்பதிலேயே அவளுடைய ஆவி இயங்கிக் கொண்டி ருந்தது.

நீட்டிய காலை மடக்கக்கூட அவளுக்குச் சக்தியில்லை. மேடு பள்ளம் தெரியாத பளிங்குபோல் இருந்த அவளது கைகள் இப் போது வெறும் நரம்புப் பின்னலாகவே தெரிந்தது. மாம்பழம் போன்றிருந்த அவள் கன்னங்கள் பழைய துணியைப்போல் சுருங்கிக் குழி விழுந்து போய்விட்டன.

கோகிலா அவளுடைய வாழ்நாளின் இறுதிக் கட்டம் வந்து விட்டது போலவே கருதினள். அவளுடைய தந்தை தியாகராஜ பிள்ளையோ கோகிலம் வடிக்கும் கண்ணிரைக் கண்டு சகிக்க முடியாமல் தனக்கு முடிவு நாள் வரவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தார். . . .

“புகழ் கொடியது. அதிலும் சின்ன வயதில் வரும் புகழ் மிகவும் கொடியது. புற்றுநோய்க்குத் தப்பமுடியாத மனிதனைப் போல் சின்ன வயதில் புகழடைவோர் அபகீர்த்தியிலிருந்து ஒரு நாளும் தப்பமுடியாது’ என்று தியாகராஜபிள்ளையின் மனம் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/36&oldid=698968" இலிருந்து மீள்விக்கப்பட்டது