பக்கம்:பாடகி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிவாசல் கதவைத் திறந்து யாரோ உள்ளே வருவது போல் தெரிந்தது.

“யாரது?

- பதில் இல்லை.

தியாகராஜபிள்ளே தள்ளாடிக் கொண்டு எழுந்து வந்து கூர்ந்து பார்த்தார்.

“ஓ கலியமூர்த்தியா! என்ன நீயும் இப்படிப் போய் விட் டாய்! உனக்கு என்ன கவலை? கோகிலத்தைவிட நீ மோச மடைந்திருக்கிருயே!”

-தியாகராஜபிள்ளை வியப்போடு கேட்டார்.

பதில் சொல்வதற்குப் பதிலாக கலியமூர்த்தி தேம்பித் தேம்பி அழுதான்.

உள்ளேயிருந்த கோ கி லா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.

‘யாரப்பா அது??-ஈனஸ் தாயியில் கோகிலம் கேடடாள் ‘நம்ம வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் தரித்திரம் மீனட்சி சுந்தரம்பிள்ளை வீட்டையும் விடவில்லையம்மா! நாங்க ரெண்டு பேரும் உடைந்த வைரம் போல் ஆகிவிட்டோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் அடையாளம் தெரியாதம்மா மழமழப்பாக மைசூர் நந்திபோல் இருந்தவன் சோளக்காட்டு பொம்மை போல் ஆகிவிட்டானம்மா! நீயே உள் கண்களே நம்ப மாட்டாய். தாடி மீசையோடு அழுக்குப்படிந்த உடைகளோடு வந்திருப்பது வேறு யாருமல்ல, கலியமூர்த்திதான் வந்திருக்கி முன், ஆம் கலியமூர்த்திதான்’

தியாகராஜபிள்ளையின் குரலில் ஒரு பதட்டம் இருந்தது.

கோகிலா பதில் சொல்லவில்லை. தாள்ப்பாளைத் திறந்து இரண்டு கதவுகளையும் திறந்து விட்டாள். அவளால் வெளியில் வந்து பேச முடியாது என்பதற்காகவே அப்படிச் செய்தாள். பெண்கள் ஒன்றை உணர்த்துவதற்கு இன்னென்றைச் செய்வார்

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/37&oldid=698969" இலிருந்து மீள்விக்கப்பட்டது